ஆலங்காயத்தில் பூத்த பிரம்ம கமலம் பூ

பூஜை செய்து வழிபாடு மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
ஆலங்காயத்தில் பூத்த பிரம்ம கமலம் பூ
Published on

ஆலங்காயம்:

பிரம்ம கமலம் பூ வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூ இலையில் இருந்தே பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும்.

பிரம்ம கமலம் பூ ஹிமாலயாவிலேயே அதிகம் காணமுடியும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வசித்து வரும் சந்தியா என்பவர் தனது வீட்டில் பிரம்ம பூ செடி வளர்த்து வருகிறார்.

இதில் ஒரு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக சந்தியா பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டார். மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com