திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு பெற்றோர்களை வரவழைத்து போலீசார் அறிவுரை
திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் ராஜ்குமார் (வயது 26) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சாய் சினேகா (21) ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக காதல் ஜோடி கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்கு சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு இருவரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். விசாரணை மேற்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் காதல் திருமணம் செய்து கொண்ட சாய்சினேகா கணவருடன் வீட்டிற்கு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com