என் மலர்
திருச்சிராப்பள்ளி
- புதிய பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
- இரு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பிறகு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பங்கேற்றார்.விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலை வகித்தனர்.
விழாவில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் புதிய பன்னாட்டு விமான முனையத்தை பார்வையிட்டார். பின்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.20 ஆயிரத்து 140 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.
பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு இன்று 6 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகளுக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டது மேலும் பயணிகள் வரும்போது அவர்களிடம் பயணச்சீட்டு உள்ளதை உறுதி செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பயணிகளின் வாகனங்கள் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதிகளில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் அழைத்து செல்ல வந்தவர்களும் குழுவாக நிற்பதை தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தப்ப்பட்டது.
டி.வி.எஸ். டோல்கேட் முதல் புதுக்கோட்டை வரை சாலையில் இரு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பிரதமர் வரும்பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் சாலையின் இரு பகுதிகளிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவுப் பகுதியில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் முழு சோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதித்தனர்.

வாகனங்களில் செல்பவர்கள் அதற்கான வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் தனிநபர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் வரும் நேரத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்கும் வண்ணம் விழா நடைபெறும் பகுதியில் எல். இடி.டி.வி பொருத்தப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு விழாவிற்கு வந்தவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தலைவர்களை வரவேற்க பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் தங்கள் கட்சிக் கொடி, தோரணங்களை வழிநெடுக கட்டியிருந்தனர். அத்துடன் பிரம்மாண்ட வளைவுகள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
- இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.
- பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.
திருச்சி :
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இதன்பின்னர் "வணக்கம், எனது மாணவ குடும்பமே" என தமிழில் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
* இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.
* பாரதிதாசன் பல்கலை கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது.
* பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
* 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை கழகங்களை தொடங்கினர்.
* பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின.
* பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.
* கல்வி என்பதுஅறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்.
* மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும்.
* புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம்.
* இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உரகுக்கு பறைசாற்றுகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
- இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.
திருச்சி :
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் 33 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.
விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
* பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி.
* இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.
* திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கியவர் பாரதிதாசன்.
* மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
* பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.
* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
* இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேருங்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
- பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் 33 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார். பின்னர் "எதிர்கால திட்டங்கள் தயாரா?" என தலைப்பில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார்.
பட்டம் பெறும் மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பட்டம் பெறும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 250 மாணவ, மாணவிகள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 10.10 மணியளவில் திருச்சிக்கு வந்தடைந்தார்.
- இந்த ஆண்டின் முதல் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் விமான நிலையத்தின் 2-வது முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 10.10 மணியளவில் திருச்சிக்கு வந்தடைந்தார்.
இதையடுத்து அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதை தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க சத்ரபதி சிவாஜி, மோடி, சர்தார் படேல் ஆகியோரைப் போல வேடமணிந்து பா.ஜ.க.வினர் வந்தனர்.
இந்த ஆண்டின் முதல் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.
- திருச்சிக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருச்சி:
இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.
இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனை அடுத்து, பிரதமர் மோடி, கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
திருச்சிக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.
- பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். இன்று காலை திருச்சி வரும் அவர், திருச்சி விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
அதன்பின் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் முடிவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் மோடி கலந்த கொள்ளும் திருச்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருநது புறப்பட இருக்கிறார்.
- காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.
- கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.
இது தவிர அந்த ஆலைகள் கர்நாடகாவிலிருந்து நெல்லைப் பெறுகின்றன. பல்வேறு இடங்களில் அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உள்ளனர். தற்போது டெல்டா பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து குறைந்துள்ள காரணத்தால் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடக பொன்னி என்று பிரபலமாக அழைக்கடும் 1 கிலோ ஆர்.என். ஆர். அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது சில்லறை சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் (ஒரு வருட ரகம்) கிலோ ₹65 ஆக உள்ளது.
மொத்த சந்தையில் பொதுவான அரிசி வகைகளின் விலை (அளவில் பெரியது) கிலோ 46-ல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் பெரும்பாலும் 2-வது போகம் நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி முதல் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வரையிலான பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவ சாகு படியை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் வரத்து மேலும் சரியும் என கூறப்படுகிறது.
இது பற்றி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, எங்களால் எங்கள் ஆலைகளை அதன் திறனுக்கு ஏற்ப இயக்க முடியவில்லை. நெல் பற்றாக்குறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. இது அரிதான நிகழ்வு.
வரும் ஆண்டில் அடுத்த சம்பா பருவம் வரை பொன்னி போன்ற பிரபலமான ரகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் சப்ளையை இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வணிகர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்றார்.
இதனால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- 3-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்க பா.ஜனதா வியூகம் அமைத்து வருகிறது.
- நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து லட்சத்தீவு புறப்பட்டு செல்கிறார்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி உள்ளது. அதை எதிர்க்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்பட பல கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் மட்டுமே வென்றது. பா.ஜனதா 3 மாநிலங்களை கைப்பற்றியது. இந்த வெற்றி பா.ஜனதாவுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அதே உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க தீவிரமாகி வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 'வேண்டும் மோடி, மீண்டும் மோடி' என்ற கோஷத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
3-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்க பா.ஜனதா வியூகம் அமைத்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த மாநிலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது போன்ற பணிகளில் பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை பிரதான கட்சியான அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து இருந்தது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டணியில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட உரசலை தொடர்ந்து பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.

தற்போதைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் பா.ஜனதா தனித்து நிற்கிறது. அதே நேரம் அதைப்பற்றி கவலைப்படாமல் கூட்டணி விவகாரங்களை கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும் என்று அண்ணாமலை தன்வழியில் கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்து 4 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாளை (2-ந்தேதி) தமிழகம் வருகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை காலை திருச்சி வருகிறார்.
பிரதான கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பா.ஜனதாவை எதிர்த்து களத்தில் நிற்கின்றன. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சவாலானதாகவே இருக்கும்.
காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
பின்னர் மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான பன்னாட்டு புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விழாவில் ரூ.19 ஆயிரத்து 850 கோடி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த 2 நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்களை அறியவும், அதற்கு ஏற்ப கட்சியினர் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 31 பேரை தனித்தனியாக தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்கள்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், சீனிவாசன், வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி உள்ளிட்ட 31 பேர் கலந்து கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணி இல்லாத நிலையில் பா.ஜனதாவின் பலம் எவ்வாறு உள்ளது? கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் எப்படி இருக்கும்? மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றி நிர்வாகிகளிடம் கேட்டறிவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சில செயல் திட்டங்களையும் கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து லட்சத்தீவு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிற்பகல் 2.30 மணிக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எடுத்து சொல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி விழாக்கோலம் பூண்டு வருகிறது. விழா நடைபெறும் விமான நிலைய பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
- நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெறும்பூர்:
திருச்சி அரியமங்கலம், கீழ அம்பிகாபுரம், காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவர். இவர் தனது தாய் சாந்தி (வயது 70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாரிமுத்து தங்கையின் கணவர் சென்னையில் இறந்து விட்டார். இதனால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டார். வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, குழந்தைகள் பிரதீபா, ஹரிணி ஆகியோர் இருந்தனர்.
நேற்று இரவு அவர்கள் வழக்கம்போல வீட்டில் தூங்கினர். நள்ளிரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக கீழே வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடந்ததும் இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருப்பதும் தெரியவந்தது அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 4 பேர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புத்தாண்டு பிறந்து உலகமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக திருச்சியில் கட்டப்பட்டுள்ளது.
- 10 சர்வதேச விமானங்களும், 4 உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும். பின்புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக திருச்சியில் கட்டப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், 4 உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
பீக் ஹவர்ஸில் 2,900 பயணிகளை செயலாக்கும் வகையில் புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 60 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 10 போர்டிங் பிரிட்ஜ்கள் இருக்கும். கட்டுப்பாட்டு அறை, துணை உபகரண அறைகள், டெர்மினல் ரேடார், ரேடார் உருவகப்படுத்துதல், ஆட்டோமேஷன் வசதிகள், வி.எச்.எப், ஏ.ஏ.ஐ. அலுவலகங்கள் மற்றும் வானிலை ஆய்வு அலுவலகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
- பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேசதரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழாவுக்காக விமான நிலையத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்ட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்புகின்றனர்.
அதற்கு அடுத்த கட்டமாக தமிழக போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். இவை தவிர தேசிய பாதுகாப்பு குழுவினர் புதிய முனையத்தின் பகுதிகளையும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

அதேபோன்று விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவு வாயிலில் தமிழக போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்புப் பணி யானது 3-ந் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






