என் மலர்tooltip icon

    தேனி

    • செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, பாலாபிஷேகம், யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
    • அதன் பின்னர் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்மாள்புரம் மலைக்கிராமத்தில் செல்வ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, பாலாபிஷேகம், யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் வருசநாடு, சிங்கராஜபுரம், பூசனூத்து ,அம்பேத்கர் காலனி, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர். பிரதிஷ்டையில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிராம கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார். இதில் கடமலை மயிலை தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, க.மயிலாடும்பாறை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி விழா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மரக்கடை பாண்டி, பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பிரசாத், மனோஜ் உள்பட விழா கமிட்டியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து தேனியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை வடபுதுப்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்பட வில்லை.

    இதனால் விவசாய பணிகளில் தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடியாக உள்ளது. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1698 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 417 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2430 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.16 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.22 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.36 மி. கன அடியாக உள்ளது.

    பெரியாறு 20.4, தேக்கடி 5.8, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.4, போடி 6.8, வைகை 0.4, சோத்துப்பாறை 17, மஞ்சளாறு 5.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 3.8, பெரியகுளம் 0.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தேனி:

    தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டி பட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியும், இந்து எழுச்சி முன்னணியும் இணைந்து 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 1
    • 12 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொன்னகரத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக முத்தாலம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியும், இந்து எழுச்சி முன்னணியும் இணைந்து 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 12 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொன்னகரத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக முத்தாலம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    சுண்டல், கொழுக்கட்டை, அவல் படைத்து வழிபட்டனர். விழாவிற்கு கவுரவத்தலைவர் குப்பமுத்து, வழிகாட்டுக்குழு தலைவர் பால்பாண்டி, ராஜபாண்டியன் ஆகியோர் தலைமையில் சின்னமனூர் நகர தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் நகர் ஒன்றிய வார்டு பொறுப்பாளர் சந்திரன், வெற்றிவேல், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, சென்னை தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை தேசிய பசுமை படை மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டம் சார்பில் மாசில்லா பசுைம வழி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை கொண்டு சிலைகளை வடிவமைத்தல், பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியை சித்ரா தொடங்கி வைத்தார். பசுமை படை ஒருங்கிணை ப்பாளர் வெங்கடேசன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வதுடன் தோட்டக் காவலாளிகளையும் தாக்கியுள்ளது.
    • சுமார் 1 வாரம் வரை தேனி மாவட்டத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மக்னா யானை நடமாட்டம் இருப்பது வழக்கமாக உள்ளது. இந்த யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வதுடன் தோட்டக் காவலாளிகளையும் தாக்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் மக்னா யானை தாக்கி இதுவரை ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

    எனவே இந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் கடந்த வருடம் டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 வாரம் வரை தேனி மாவட்டத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் மக்னா யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி பிடிபடாமல் சென்றது. இந்நிலையில் தற்போது தேவாரம் அருகே உள்ள வட்ட ஓடைப்பகுதியில் மக்னா யானை புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

    இதனால் விவசாயிகள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்தாலும் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் மூலம் 5மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாராமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி மழை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.47 அடியாக சரிந்துள்ளது. 239 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.95 அடியாக உள்ளது. 416 கன அடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3கன அடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    • குமுளி மலைப்பாதையில் லோயர்கேம்ப் பகுதியில் கொரோனா பரவலின்போது நிரந்த ரமாக சோதனைச்சாவடி அமைத்து சுகாதாரத்துறையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • பகலில் மட்டும் சோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர் இரவில் பணி மேற்கொள்வதில்லை.

    கூடலூர்:

    கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி ெசய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

    அதன்படி சோதனைச்சாவடிகளில் டாக்டர், சுகாதார ஆய்வாளர் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களில் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னர் தமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்த பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக குமுளி மலைப்பாதையில் லோயர்கேம்ப் பகுதியில் கொரோனா பரவலின்போது நிரந்த ரமாக சோதனைச்சாவடி அமைத்து சுகாதாரத்துறையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த சோதனைச் சாவடியில் மின் வசதி, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பகலில் மட்டும் சோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர் இரவில் பணி மேற்கொள்வதில்லை.

    இதேபோல் போடி மெட்டு, கம்பம் மெட்டு பகுதியில் தொக்கத்தில் அனைத்து வாகனங்களிலும் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்தனர். ஆனால் நாளடைவில் சில வாகனங்களை மட்டும் சோதனை செய்து விட்டு மற்ற வாகனங்களை கண்டுகொள்வதிலை. எனவே எல்லைப்பகுதிகளில் நிரந்தர சோதனைச்சாவடி அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    • கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது.

    வருசநாடு:

    வருசநாடு அருகே கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35). இவர் கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.

    அதற்கு ஹாலோபிளாக் கற்கள் எடுத்துக் கொண்டு டிராக்டரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது. இதில் தலை மற்றும் உடம்பில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • டந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

    பெரியகுளம்:

    ெபரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). இவர் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியிடம் தனக்கு வாழ பிடிக்க வில்லை என புலம்பியுள்ளார்.

    அவர் பாண்டியனுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாண்டியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோம்பையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ரூ.21 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் பழைய சுற்றுச்சுவர் மீதே புதிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திரு காளாத்தீஸ்வரர் - ஞானாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலின் தெப்பக்குளம் சிதிலமடைந்து காணப்பட்டது. கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பா.ஜ.க.வினர் கோரிக்ைக விடுத்தனர்.

    ரூ.21 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெப்பக்குளத்தின் கிழக்குப்பகுதியில் நடைபாதை சுவர் திடீரென சரிந்து விழுந்து சேதமானது. இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் பழைய சுற்றுச்சுவர் மீதே புதிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது.

    அதனால்தான் சுவர் சரிந்து விழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் தெப்பக்குளத்தின் கட்டுமானப்பணி உறுதித்தன்மையை முழுமையாக ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×