என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கேரளாவில் நிபா வைரஸ் தமிழக எல்லையில் கண்காணிப்பில் சுணக்கம் காட்டும் சுகாதாரத்துறையினர்
- குமுளி மலைப்பாதையில் லோயர்கேம்ப் பகுதியில் கொரோனா பரவலின்போது நிரந்த ரமாக சோதனைச்சாவடி அமைத்து சுகாதாரத்துறையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- பகலில் மட்டும் சோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர் இரவில் பணி மேற்கொள்வதில்லை.
கூடலூர்:
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி ெசய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி சோதனைச்சாவடிகளில் டாக்டர், சுகாதார ஆய்வாளர் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களில் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னர் தமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்த பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குமுளி மலைப்பாதையில் லோயர்கேம்ப் பகுதியில் கொரோனா பரவலின்போது நிரந்த ரமாக சோதனைச்சாவடி அமைத்து சுகாதாரத்துறையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த சோதனைச் சாவடியில் மின் வசதி, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பகலில் மட்டும் சோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர் இரவில் பணி மேற்கொள்வதில்லை.
இதேபோல் போடி மெட்டு, கம்பம் மெட்டு பகுதியில் தொக்கத்தில் அனைத்து வாகனங்களிலும் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்தனர். ஆனால் நாளடைவில் சில வாகனங்களை மட்டும் சோதனை செய்து விட்டு மற்ற வாகனங்களை கண்டுகொள்வதிலை. எனவே எல்லைப்பகுதிகளில் நிரந்தர சோதனைச்சாவடி அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.






