search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து ஏமாற்றும் மழை 47 அடியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம்
    X

    கோப்பு படம்.

    தொடர்ந்து ஏமாற்றும் மழை 47 அடியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம்

    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்தாலும் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் மூலம் 5மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாராமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி மழை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.47 அடியாக சரிந்துள்ளது. 239 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.95 அடியாக உள்ளது. 416 கன அடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3கன அடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×