search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai dam water level"

    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்தாலும் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் மூலம் 5மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாராமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி மழை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.47 அடியாக சரிந்துள்ளது. 239 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.95 அடியாக உள்ளது. 416 கன அடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3கன அடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    • மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
    • கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடி உயரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவிலேயே நீடித்து வந்தது.

    தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1819 கனஅடிநீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.

    முல்ைலபெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 525 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடியாக உள்ளது. 42 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடிவரை உயர்ந்தது.
    • கடந்த சில நாட்களாக 70 அடிக்கும் மேல் இருந்த நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்படும் கூடுதல் தண்ணீர் திறப்பால் 69.87 அடியாக குறைந்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடிவரை உயர்ந்தது. அதனைதொடர்ந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 71 அடியில் நிலைநிறுத்தப்பட்ட வைகை அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை நீர்திறப்பு 1669 கனஅடியாக உள்ளது. அணைக்கு 779 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக 70 அடிக்கும் மேல் இருந்த நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்படும் கூடுதல் தண்ணீர் திறப்பால் 69.87 அடியாக குறைந்துள்ளது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 135.55 அடியாக உள்ளது. 673 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, 132 கனஅடிநீர் வருகிறது. இதில் 92 கனஅடிநீர் உபரியாகவும், 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 32 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்துள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் உயரம் 71 அடி ஆகும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த ஆண்டில் 2 முறை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதிகளின் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    ‘கஜா‘ புயல் காரணமாக கடந்த வாரம் வைகை அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைய தொடங்கியது. மேலும் வைகை அணைக்கான நீர்வரத்தும் கணிசமாக குறைந்தது.

    இதன் எதிரொலியாக, கடந்த வாரம் 68 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக குறைந்து விட்டது. சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளுக்கு இன்னும் 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்குநாள் நீர்வரத்தும் குறைந்து கொண்டே இருக்கிறது.

    அணையில் இருந்து, கடந்த சில தினங்களாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி திறக்கப்படுகிற தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,560 கன அடியாக குறைக்கப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 913 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,560 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. #Southwestmonsoon #Vaigaidam

    கூடலூர்:

    தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் கைகொடுத்ததால் வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இருந்தபோதும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.

    இதன்பின் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 18 நாட்களுக்கு 1560 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    எனவே அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 4 அடி சரிந்து 65 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்தால் மட்டுமே 58-ம் கால்வாய் திட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியும். தற்போது நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளதால் கடந்த 20 நாட்களாக 58-ம் கால்வாய் திட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதனால் 58-ம் கால்வாய் மூலம் பயன் அடையும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 242 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4709 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1482 கன அடி. திறப்பு 4960 கன அடி. இருப்பு 4666 மி.கன அடி. ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக இன்று 2500 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடி. வரத்து 2 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.12 அடி. #Southwestmonsoon #Vaigaidam

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை நெருங்கி உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது.

    ஆனால் அதன்பிறகு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை முதல் 15583 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 141.15 அடியாக உள்ளது. அணையில் இருந்து 2600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7437 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4608 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5162 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையில் நேற்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அணை முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணை கடந்த 2011-ம் ஆண்டு முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அந்த ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. அதன்பிறகு போதிய மழை பெய்யாததால் அணை நிரம்ப வில்லை. அதன்பிறகு தற்போதுதான் அணை முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வைகை ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ள சிவஞானபுரம், கூட்டாத்து அய்யம்பாளையம், போடிகவுண்டன்பட்டி, எஸ்.வாடிப்பட்டி, நடக்கோட்டை, லட்சுமிபுரம், சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என்றும் அவசர தேவைகளுக்கு 0451-1077 என்ற கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 43.2, தேக்கடி 40, கூடலூர் 7.1, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 4, வீரபாண்டி 19, வைகை அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    35 அடியில் இருந்த வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 48.82 அடியாக உள்ளது. நாளை 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூடலூர்:

    கோடை மழை ஓரளவு கைகொடுத்ததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 127 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைக்கு நீர்வரத்து 905கனஅடியாக குறைந்துள்ளது.

    மேலும் அணையின் நீர்மட்டமும் 126.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1406 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது.

    கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து 1110 கனஅடியாக உள்ளது. ஆனால் நீர்திறப்பு மதுரைமாநகர கூடிநீருக்காக மட்டும் 60 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் 35 அடியில் இருந்த வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 48.82 அடியாக உள்ளது. நாளை 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் மதுரை மாநகர குடிநீருக்கு தட்டுப்பாடு நீங்கியுள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 123.82 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 11, தேக்கடி 1.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வைகைஅணை நீர்மட்டம் 37 அடியை நெருங்கி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வந்ததால் பெரியாறு அணை நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியது. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை குறைந்தது.

    ஆனால் அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல் மழை பெய்தததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததோடு அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 36.78 அடி நீர் உள்ளது. நீர்வரத்து 209 கன அடி. மதுரை மாநகர குடிநீருக்காக 48 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு நீர்மட்டம் 36.50 அடி. வரத்து 66 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.

    மஞ்சளாறு 1, சோத்துப் பாறை 7, மருதாநதி 10.3, கொடைக்கானல் 33.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×