search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் 37 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்
    X

    தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் 37 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வைகைஅணை நீர்மட்டம் 37 அடியை நெருங்கி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வந்ததால் பெரியாறு அணை நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியது. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை குறைந்தது.

    ஆனால் அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல் மழை பெய்தததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததோடு அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 36.78 அடி நீர் உள்ளது. நீர்வரத்து 209 கன அடி. மதுரை மாநகர குடிநீருக்காக 48 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு நீர்மட்டம் 36.50 அடி. வரத்து 66 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.

    மஞ்சளாறு 1, சோத்துப் பாறை 7, மருதாநதி 10.3, கொடைக்கானல் 33.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×