என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கூடுதல் தண்ணீர் திறப்பால் தொடர்ந்து சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டம்
- மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
- கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடி உயரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவிலேயே நீடித்து வந்தது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1819 கனஅடிநீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.
முல்ைலபெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 525 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடியாக உள்ளது. 42 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.






