என் மலர்
தேனி
- சொத்து தகராறில் அண்ணனையே மாற்று த்திறனாளி வெட்டி கொலை செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே எரசக்க நாயக்கனூரை சேர்ந்தவர் முருகன் (வயது49). இவரது சகோதரர் பால்பாண்டி (38). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பூர்வீக 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். ஆனால் பால்பாண்டிக்கு குறைந்த அளவே பணம் கொடுத்துள்ளனர். இதனால் பால்பாண்டிக்கு முருகன் மீது ஆத்திரம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று குடி போதையில் இருந்த பால்பாண்டி முருகனிடம் சைகையால் பிரச்சினை செய்தார். அப்போது முருகனுக்கு சொத்து கொடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டார்.
ஆத்திரம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
சொத்து தகராறில் அண்ணனையே மாற்று த்திறனாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- எவ்வித புகார்களுக்கும் இடமளி க்காத வகையில் பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரிய குளம் வட்டத்திற்குட்பட்ட ஜெயமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நெல் கொள்முதல் நிலை யத்திற்கு விவசாயிகளிட மிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளின் எண்ணி க்கை, இருப்பு அதற்கான பதிவேடுகள், அச்சமயத்தில் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட நெல்லின் ஈரப்பதம், விவசாயிகளிடம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சம்மந்த மாக ஏதும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் விவசாயிகளிடம் கேட்டறிந்து தெரிவித்த தாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயி களின் நலனை பாது காத்திடும் வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை பாது காத்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நெல்பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறை களின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான தொகையினை உடனு க்குடன் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயி களிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை எவ்வித புகார்களுக்கும் இடமளி க்காத வகையில் பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.
- பென்னிகுவிக் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு திரும்பி சென்று தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
- முல்லைப்பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று வரை தண்ணீர் கிடைத்து வருகிறது.
கூடலூர்:
இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன் சென்னை மாகாணத்தில் வைகை வடிநிலப்பரப்பில் பலமுறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அப்போது சென்னை அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் செயலாளராக இருந்த ஜான்பென்னிகுவிக் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக கடலில் கலப்பதை பார்த்து ஒரு அணை கட்ட முடிவு முடிவு செய்தார்.
இதுகுறித்து ஆங்கிலேயே அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1895-ம் ஆண்டில் அக்டோபர் 11ந்தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.
ஆனால் இந்த தொகை போதவில்லை. அதன்பிறகு அடர்ந்த காடு, விஷ பூச்சிகள், காட்டு யானைகள், மிருகங்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி 3 ஆண்டுகளாக அணை பாதி கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு இந்த திட்டத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேயே அரசு மறுத்துவிட்டது.
இதனால் பென்னிகுவிக் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு திரும்பி சென்று தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று வரை தண்ணீர் கிடைத்து வருகிறது.
இங்கிலாந்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில் சகல வசதியுடன் மாளிகையில் வாழ்ந்த பென்னிகுவிக் குடும்பம் முல்லைப்பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்.
மாளிகையில் வாழ்ந்த அவர்கள் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் குடியேறி வாழ்ந்தனர். கடந்த 9.3.1911ஆம் ஆண்டு தேதி பென்னிகுவிக் காலமானார். அப்போது அவருடைய 5 மகள்களில் மூத்த மகளுக்கு 30 வயது. அவருடைய ஒரே மகனுக்கு 11 வயது.
ஏழ்மை நிலையில் உறவினர்கள் யாரும் உதவாவதால் அவருடைய 3 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் வாரிசுகள் இல்லாமலேயே காலமானார்கள். ஒரு மகள் ஜெர்மனிக்கு சென்று அங்கு ஜெர்மானியரை திருமணம் செய்து கொண்டு நிரந்தரமாக குடியேறினார். அவருடைய ஒரே மகன் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார்.
வெற்றிகரமாக பெரியாறு அணையை கட்டி முடித்த பென்னிகுவிக்கிற்கு சென்னை மாகாணா பொதுப்பணித்துறை செயலாளராக பதவி உயர்வு கொடுத்து அழகு செய்தது ஆங்கிலேயே அரசு. தொடர்ந்து சிறிது காலம் ராயல் இந்திய பொறியியல் கல்லூரி கடைசித்தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார்.
1889-ல் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராகவும் பதவி வகித்தார். 1899-ம் ஆண்டு பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு பென்னிகுவிக்கிடம் ஆலோசனை கேட்டது.
பென்னிகுவிக் மறைந்து இன்று 112-வது நினைவு தினம் தேனி மாவட்ட மக்களால் மிகவும் உருக்கமாக அனுஷ்டிக்கப்பட்டது. இங்குள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அவரது சிலை முன்பு நின்று அஞ்சலி செலுத்தினர்.
- ராயப்பன்பட்டி சண்முகாநதி நீர்தேக்க கால்வாய் புனரமைக்கும் பணியினை கலெக்டர் , எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
- புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து விவசாய பயன்பா ட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேனி:
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகாநதி நீர்தேக்க கால்வாய் புனரமைக்கும் பணியினை கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் ெதாடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயி களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் தேனி மாவட்டம் உத்தம பாளையம் வட்டத்தி ற்குட்பட்ட சண்முகாநதி நீர்தேக்க கால்வாய் புனர மைப்பு பணிகள் மேற்கொ ள்ள வேண்டி விவசாயி களின் கோரிக்கையின் அடிப்படையில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்நீர்த்தேக்க கால்வாய் புனரமைப்பு பணிகள் ராயப்பன்பட்டி கிராமத்திலிருந்து மல்லி ங்காபுரம், சின்ன ஓவுலா புரம், எரசக்கநாயக்கனூர், கன்னிேசர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளை யம்மாள்புரம் வழியாக ஓடைபட்டி கிராமம் வரை ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்மூலம் நேரடியாக 1640 ஏக்கர் புன்செய் நிலங்களும், நாயக்கர்குளம், பெரியான்குளம் மற்றும் கருவேலங்குளம் ஆகிய 3 கண்மாய்கள் ஆகியவற்றிற்கு மறைமுக பாசனத்திற்கும் தங்குதடையின்றி விவசாயத்திற்கு பாசன நீர் கிடைத்திடும் வகையில் வழிவகை செய்யப்பட்டு ள்ளது.
மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் மூலம் விவசாய தேவைகள் மற்றும் குடிநீர் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து விவசாய பயன்பா ட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.
தேனி:
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2022-2023ஆம்ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் நபர்கள் கடந்த ஜனவரி 1, 2022-அன்று 58 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் பெறப்பட்ட வருமானச் சான்று , தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோஇலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500 ம் , மருத்துவப்படி ரூ.500-ம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.நேரடியாக சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே, மாவட்டத்தில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது கனமழை பெய்ததால் அடுக்கம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டன.
- சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கொடை க்கானல்-அடுக்கம் பெரியகுளம் சாலையில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடை க்கானல் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது கனமழை பெய்ததால் அடுக்கம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறை கள் உருண்டன.
விபத்து க்களும் ஏற்பட்டதால் சாலையில் போக்கு வரத்திற்கு தடைவிதித்து மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பணிகளை மேற்கொண்டு போக்கு வரத்தை சீரமைத்தனர்.
இந்த இடத்தில் நிரந்தர மாக சீரமைப்பு பணிகளை தற்போது மேற்கொண்ட போது பாறைகள் மற்றும் கற்கள் உருண்டன.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிரந்தரமாக சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
எனவே கொடை க்கானல்-அடுக்கம் பெரியகுளம் சாலையில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. சீரமைப்பு பணி மேற்கொ ள்ள 1 மாதத்திற்கு மேலாகும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ெதரி வித்துள்ளனர்.
இதனால் அடுக்கம் சாமக்காடு, பாலாமலை, பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கும் பொருட்களை பெருமா ள்மலை, வத்தலக்குண்டு சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பைக்குகளில் செல்லவும் நெடுஞ்சாலைத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து கொடை க்கானல் நெடுஞ்சாலை த்துறை உதவிப் பொறியாளர் பரதன் கூறியதாவது,
கடந்த புயலின் போது ஏற்பட்ட நிலச்சரிவு பகுதி யில் தற்காலிக சீரமைப்பு பணி செய்யப்பட்டு இருந்தது. இந்த தற்காலிக சீரமைப்பு பணிகள் நிரந்தரமாக சீரமைப்ப தற்குரிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு ள்ளன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்க முடியாது. விரைவில் இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
- தம்பிரான் ஓட்டம் 3 முறை நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
- பாரம்பரியமிக்க தம்பிரான் ஓட்ட விழாவில் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பார்வையிட்டனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பைத்தம்மாள், பொம்மையைசாமி கோவிலில் மாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கரிசல்பட்டி கிராம பூசாரி திருமலை வடிவேல் பாண்டியன் மற்றும் கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்த செல்லச்சாமி, மலையாண்டிநாயக்கன் பட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டியன், தர்மலிங்கபுரத்தை சேர்ந்த கணேஷ் மற்றும் ஜக்கையன், ராமர் உள்ளிட்டோர் தம்பிரான் ஓட்டம் விழாவை தலைமை தாங்கி நடத்தினர்.
16 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் கிராமத்தில் நாட்டாமை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூஜை கூடைகளை உறுமி மேளம் முழங்க தேவராட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் ஊர் பட்டாதாரர்கள் மற்றும் பெரியதனம் ஆகியோர் முன்னிலையில் கொழுக்கட்டை தம்பிரான் ஓட்டம் நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட காளைகளை கோவில் வாசலில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் இருந்து ஓட விட்டனர். கோவில் வாசலில் வெள்ளை துண்டு விரித்து எலுமிச்சை பழம் வைக்கப்பட்டிருந்தது. எந்த காளை முதலில் விரித்து வைத்த வெள்ளை வேட்டியை கடக்கிறதோ அந்த காளைக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேவராட்டத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிவரும் போது காளையின் உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் மூங்கில் குச்சியுடன் காளைகளுக்கு உற்சாகம் அளித்து ஓடி வந்தனர்.
இதேபோல் இந்த தம்பிரான் ஓட்டம் 3 முறை நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பாரம்பரியமிக்க இந்த தம்பிரான் ஓட்ட விழாவில் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பார்வையிட்டனர்.
- புதுப்பெண்ணிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. திடீரென அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கருவேலநாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்த வர் கண்ணன்பிரபு(44). ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் அபிநயா(18). இவருக்கும் கேரளாவை சேர்ந்த கோபிகண்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது.
அதன்பிறகு அபிநயா விற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இத னால் புதுமண தம்பதிகளை தங்களது வீட்டிற்கு வர வழைத்தனர். அபிநயாவிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அபிநயா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 40 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்த உள்ளார்.
- காருக்குள் இருந்த ஆனந்த் மற்றும் அவரது மற்றொரு நண்பர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
- உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தேனி:
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் ஆனந்த் (வயது23). இவர் தனது காரில் இன்று காலை பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கார் மதுராபுரி அருகே வந்து கொண்டிருந்தபோது தர்மபுரியில் இருந்து கம்பம் நோக்கி வந்த சரக்கு லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த ஆனந்த் மற்றும் அவரது மற்றொரு நண்பர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தேனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிய மற்றொருவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
- கூ:டுதல் தண்ணீர் திறக்கவில்லையெனில் 2-ம் போக அறுவடை பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் போக அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. கூடலூர், தாமரைக்குளம், டி.டி.ஆர்.வட்டம், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடை பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில் முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
பாசனத்திற்கும், தேனி மாவட்டம் குடிநீர் தேவைக்கும் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கூடலூர் பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது இப்பகுதி வயல்களில் கருதள்ளக்கூடிய நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்கள் தண்ணீர் திறந்தால் மட்டுமே நெற்கதிர் அறுவடைக்கு தயார் நிலைக்கு வரும்.
எனவே கூடலூர் பகுதி விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் தண்ணீர் திறக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இல்லையெனில் 2-ம் போக அறுவடை பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைபெரியாறு அணையில் தற்போது 118.85 அடி தண்ணீர் உள்ளது. வரத்து 30 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2421 மி.கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 54.92 அடி, வரத்து 222 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 2706 மி.கனஅடி.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே அணைகளின் நீர்மட்டம் உயரும் என்றும், ஜூன்மாதம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- தாயார் மறைவால் துக்கத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் 30 நாட்கள் கழித்தே கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கவனம் செலுத்தி வருகிறார்.
பெரியகுளம்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் கடந்த மாதம் 24-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்த ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கி உள்ளார்.
துக்க நிகழ்ச்சிகளில் தி.மு.க. உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லக்கூட இல்லை என்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள் ஆதரவான நிலையில் இருந்தனர். ஆனால் பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.
துக்க நிகழ்ச்சியில்கூட பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மாநில நிர்வாகிகளான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் தினந்தோறும் அவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர். உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், தாயார் மறைவால் துக்கத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் 30 நாட்கள் கழித்தே கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இருந்தபோதும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறார். அதில் வரும் தீர்ப்புகள் மற்றும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
30 நாட்கள் கழித்து அவரது அதிரடி அரசியல் தொடரும். அதன் பின்பு அ.தி.மு.க.வை தொண்டர்கள் பலத்துடன் மீட்டு கொண்டு வருவார் என்றனர்.
ஆனால் இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், ஓ.பி.எஸ். பா.ஜ.க.வின் முழுநேர விசுவாசியாக மாறிவிட்டார். அ.தி.மு.க.வில் அவருக்கு இடம் இல்லை என்பதை மீண்டும் நிர்வாகிகள் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் தொண்டர்களை நம்பாமல் கோர்ட்டு, வழக்கு, பா.ஜ.க. ஆகியவற்றை நம்பியே ஓ.பி.எஸ். உள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து தோல்வி ஏற்பட்டு வருகிறது. கட்சியில் எடப்பாடி பழனிசாமி முழுமையாக ஈடுபட்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். ஆனால் ஈரோடு தேர்தலில் கூட ஓ.பி.எஸ். தனது பங்கை ஆற்றாமல் ஒதுங்கி விட்டார். 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டால் நாங்கள் ஒதுங்கிக்கொள்வோம் என்று கூறியதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இன்னும் பா.ஜ.க. தயவையே நம்பி இருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையையே விரும்புகின்றனர் என்றனர்.
- தேனி சாலையில் 2 பஸ்டிரைவர்களும் போட்டி போட்டு ஓட்டினர். ஒருவரை யொருவர் முந்திசெல்ல முயன்றனர்.
- லாரியும், பஸ்சும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு தனியார் பஸ் சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் வெள்ளிமலையில் இருந்து போடிக்கு அரசு பஸ் சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வருசநாடு-தேனி சாலையில் 2 பஸ்டிரைவர்களும் போட்டி போட்டு ஓட்டினர். ஒருவரை யொருவர் முந்திசெல்ல முயன்றனர்.
அப்போது திடீரென ஒரு பெண் பைக்கில் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க தனியார் பஸ் டிரைவர் பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த அரசு பஸ் கண்இமைக்கும் நேரத்தில் தனியார் பஸ் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மினி லாரி மீதும் மோதி நின்றது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் ரோசனம்பட்டியை சேர்ந்த அருள்(35), செல்வம்(51), குமணன்தொழுவை சேர்ந்த முருகன்(42), குமுதா(40), ஆதிஸ்(4), மாரீஸ்வரன்(13), சீப்பாலக்கோட்டையை சேர்ந்த மோகன்(31), திவ்யா(30), மேகலா(27), தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த முத்துமாயக்காள்(40), ஜீவானந்தம்(4), ஆத்தங்கரை பட்டியை சேர்ந்த பசுபதி(75), அன்னத்தாய்(52), திருப்பூரை சேர்ந்த லட்சுமி(52) உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரண மாக தேனி-வருசநாடு சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






