search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    ஜெயமங்கலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு

    • ஜெயமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • எவ்வித புகார்களுக்கும்‌ இடமளி க்காத வகையில் பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரிய குளம் வட்டத்திற்குட்பட்ட ஜெயமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நெல் கொள்முதல் நிலை யத்திற்கு விவசாயிகளிட மிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளின் எண்ணி க்கை, இருப்பு அதற்கான பதிவேடுகள், அச்சமயத்தில் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட நெல்லின் ஈரப்பதம், விவசாயிகளிடம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சம்மந்த மாக ஏதும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் விவசாயிகளிடம் கேட்டறிந்து தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயி களின் நலனை பாது காத்திடும் வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை பாது காத்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நெல்பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறை களின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான தொகையினை உடனு க்குடன் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயி களிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை எவ்வித புகார்களுக்கும் இடமளி க்காத வகையில் பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×