என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்தை அபகரித்ததால் ஆத்திரம் அண்ணனை வெட்டிக் கொன்ற மாற்றுத்திறனாளி
    X

    கோப்பு படம்

    சொத்தை அபகரித்ததால் ஆத்திரம் அண்ணனை வெட்டிக் கொன்ற மாற்றுத்திறனாளி

    • சொத்து தகராறில் அண்ணனையே மாற்று த்திறனாளி வெட்டி கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே எரசக்க நாயக்கனூரை சேர்ந்தவர் முருகன் (வயது49). இவரது சகோதரர் பால்பாண்டி (38). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.

    முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பூர்வீக 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். ஆனால் பால்பாண்டிக்கு குறைந்த அளவே பணம் கொடுத்துள்ளனர். இதனால் பால்பாண்டிக்கு முருகன் மீது ஆத்திரம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று குடி போதையில் இருந்த பால்பாண்டி முருகனிடம் சைகையால் பிரச்சினை செய்தார். அப்போது முருகனுக்கு சொத்து கொடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

    சொத்து தகராறில் அண்ணனையே மாற்று த்திறனாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×