என் மலர்tooltip icon

    தேனி

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பராமரிக்கப்படும் பதிவேட்டில் உரிய பதிவு களை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவல ர்களை அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சிப்பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.17.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உறை கிணறு கட்டுமானப்பணி, கொண்டல் நாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள பணி,

    ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகத்திட்ட ரேசன் கடைகட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வயிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, உப்புக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட மகளிர் சுகாதார வளாகம் உப்புக்கோட்டை ஊராட்சி மன்ற அலு வலகத்தில் வளர்ச்சித்திட்ட ப்பணிகள் குறித்த பதிவேடு களை ஆய்வுசெய்தார். காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உரிய பதிவு களை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவல ர்களை அறிவுறுத்தினார்.

    • தொழிலதிபர வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த காவலாளி தற்கொலை செய்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 70). மொத்த பிராய்லர் கோழிக்கறி வியாபாரம், முட்டை உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார். சொந்த விவசாய தோட்டங்களும் உள்ளது.

    நேற்றுகாலை ஆணைமலையன்பட்டி தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோங்கரே உத்தரவின் பேரில் அவரை கடத்திச் சென்ற காரை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிரமாக தேடினர். ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்ற வாகனத்தை போலீசார் துரத்திச் சென்றபோது வைகை புதூர் பிரிவில் கடத்தல் கும்பல் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அதிசயத்தை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.

    இதனிடையே வாகனம் வைகைபுதூர் வழியாக தப்பிச் செல்வதை வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்ததின் பேரில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஒத்தவீடு வழியாக சென்ற அந்த வாகனத்தை மேலக்காமக்காபட்டியில் வைத்து பிடித்தனர். அந்த காரை மதுரை மாவட்டம் திருநகர் சக்களைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபு (31) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகரை சேர்ந்த திருமுருகன் மகன் அஜீத் (26), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கவுசிகன் (22) மற்றும் கூழ் என்ற அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் கூலிப்படையாக இருந்து அதிசயத்தை கடத்தியதாகவும் போலீசார் தங்களை சுற்றி வளைத்ததால் வேறு வழியின்றி அதிசயத்தை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்நிலையில் அதிசயம் தோட்டத்தில் காவலாளியாக வேலைபார்த்த சங்கரலிங்கம் (65) என்பவர் நேற்று மாலை தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நாராயணதேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் கடந்த 3 மாதமாகத்தான் இங்கு வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி அங்காளஈஸ்வரி இறந்து விட்டதால் அவரது தங்கையான மீனா (46) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அதிசயத்திற்கு சொந்தமான தோப்பு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    அதிசயத்தை கடத்திய கூலிப்படை பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் சங்கரலிங்கம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. சங்கரலிங்கத்தின் செல்போனில் கடத்தல்காரர்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூலிப்படை பிடிபட்டுள்ள நிலையில் கடத்தலுக்கு மூளையாக இருந்தது யார் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படையினரை துரித வேகத்தில் பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

    • கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கூடலூர்:

    கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இன்று காலை 11 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 55 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 19.68 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 23 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி குருலட்சுமி(28). இவர்களுக்கு ஹரிபிரகாஷ்(12), ஜெசிந்தா(10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    பின்னர் சமாதானம் செய்து மீண்டும் சங்கர் அழைத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் தேனி கோட்டைக்களம் பகுதியை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமலதா(28). இவர் தனியார் பிஸியோ கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீரை வராக நதியின் குறுக்கே சோத்துப்பாறை அணையில் தேக்கி பெரியகுளம் பகுதி குடிநீர் மற்றும் பாசனதேவைக்காக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
    • பெரியகுளம் நகரா ட்சிக்கு மட்டுமின்றி சோத்து ப்பாறை கூட்டுகுடிநீர் திட்டத்தை நம்பியுள்ள 17 பேரூராட்சிகள், 3 ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரியகுளம்:

    கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீரை வராக நதியின் குறுக்கே சோத்துப்பாறை அணையில் தேக்கி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி குடிநீர் மற்றும் பாசனதேவைக்காக வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரிய குளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீருக்காக மட்டும் 3 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை இல்லாததால் 126.28 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 9.84 அடியாக உள்ளது. பிப்ரவரி முதல் வாரம் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தது. மீன்பிடிக்க அனுமதி இல்லாத போதும் சிலர் அதிகாரிகளின் துணையோடு தொடர்ந்து விநாடிக்கு 25 கனஅடி வீதம் மார்ச் முதல்வாரம் வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு மீன்பிடித்து விற்பனைக்கு அனுப்பி வந்தனர். அப்போது மீன்கள் எடை அதிகரிக்க இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகளை அணைநீரில் கொட்டி நீரையும் மாசுபடுத்தினர்.

    மீன்பிடிக்க வசதியாக தண்ணீரை படிப்படியாக வெளியேற்றியதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அந்த சமயத்தில் பேரிஜம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது தண்ணீர் திறந்தால் மீன்பிடிக்க சிரமம் ஏற்படும் எனக்கருதி தண்ணீரை வரவிடாமல் தவிர்த்து விட்டனர். தேனி மாவட்டத்திலேயே கோடை காலத்திலும் வறட்சி இல்லாத நகராட்சியாக பெரியகுளம் இருந்து வந்தது.

    ஆனால் தற்போது நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் பேரிஜம் ஏரியில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 36 மணிநேரத்தில் சோத்துப்பாறை அணைக்கு வந்துவிடும். அதன்பிறகு நாளை முதல் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    பெரியகுளம் நகரா ட்சிக்கு மட்டுமின்றி சோத்து ப்பாறை கூட்டுகுடிநீர் திட்டத்தை நம்பியுள்ள 17 பேரூராட்சிகள், 3 ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரியகுளம் அருகே வெள்ளகவி வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது.
    • தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் கும்பக்கரை மேல் உள்ள வெள்ளகவி வனப்பகுதியில் நேற்று மாலை முதல் சிறிய அளவில் பற்றிய காட்டு தீயானது காற்றின் வேகம் அதிகமானதால் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

    இந்த காட்டுத் தீ 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான இடங்களில் பரவியதால் வனப்பகுதியில் இருந்த அறியவகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் வன உயிரினங்கள் பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

    எனவே கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தீயை கட்டுப்படுத்துவது குறித்து பெரியகுளம் வனச்சரக அதிகாரியிடம் கேட்டபோது காவலர்கள் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் என 20 நபர்களை கொண்டு தொடர்ந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இரவு நேரம் மற்றும் உயரமான மலைப்பாதை என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகதிருவிழா மார்ச் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடத்தப்பட்டது.
    • 11-ம் நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது.

    தேனி:

    தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகதிருவிழா மார்ச் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடத்தப்பட்டது. 11-ம் நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதுகுறித்து கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், புத்தக திருவிழா தொடங்க ப்பட்டு இன்றைய தினம் வரை 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த 50 புத்தக அரங்குகளின் மூலம் ரூ.81.06 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.22500 மதிப்பிலான 4394 புத்தகங்கள் சிறைத்துறைக்கு நன்கொடையாக வழங்க ப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலுகின்ற 11500 மாணவ-மாணவி களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது.
    • கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் தங்கதுரை, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பம் மெட்டு ரோடு 18-ம் கால்வாய் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு ஜீப்பை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்கள் போலியான 5000 ரூபாய் மதிப்புள்ள 4 முத்திரை தாள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

    ஜீப்பில் வந்த கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையை சேர்ந்த முகமதுசியாது(41), சிரட்டவேலி பகுதியை சேர்ந்த விபின்தாமஸ்(36) ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கம்பம் 15-வது வார்டு ஓடைக்காரத்தெருவில் உள்ள கோபிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் போலியான முத்திரை தாள்களை அச்சடித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த மேலும் சில போலி முத்திரை தாள்களை கைப்பற்றினர். இதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருந்த முத்திரை தாள்கள் அச்சடிக்க பயன்படுத்திய மிசின், பிரிண்டர், ஜெராக்ஸ் மிசின், டோனர், ஸ்டெபிளேசர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலி முத்திரை தாள்களை போல கள்ளநோட்டுகள் தயாரித்தும் இவர்கள் புழக்கத்தில் விட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது. எனவே இந்த கும்பலுக்கும் அதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? கள்ளநோட்டுகளை யார் யாருக்கு கொடுத்து புழக்கத்தில் விட வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகள் சுவாதி(17). இவர் ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது தோழியின் திருமணத்திற்கு சென்றுவருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூம்பாறையை சேர்ந்த மோகன் மகள் பவானி(19). தேனி தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார் சம்பவத்தன்று தேனி புதிய பஸ்நிலையத்தில் தனது தந்தையுடன் நின்று கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கோம்பை டி.வி.கே.தெருவை சேர்ந்த சின்னதம்பி மகள் பிரியதர்ஷினி (17). இவர் தேவாரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தேவாரம் போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அவர்களை மீட்டனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றபோது பிரியதர்ஷினி மாயமானார். இதுகுறித்து கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 வயது சிறுவன் கடமலைக்குண்டுவை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த 17 வயது சிறுவன் கடமலைக்குண்டுவை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் காதலிப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அந்த சிறுவனை கண்டித்துள்ளனர்.

    இனிமேல் தனது மகளை பார்க்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று பள்ளியில் நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்று விட்டு மாணவி வீட்டில் இருந்தார். பெற்றோர்கள் வேலைக்கு சென்றதை அறிந்த சிறுவன் நைசாக வீட்டுக்குள் நுழைந்து மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.

    அதன்பின்னர் அழுதுகொண்டே வீட்டில் இருந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்ததில் நடந்த விவரங்களை கூறி உள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது.
    • மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் புகாரின் பேரில் ஆசிரியர் உள்பட அவரது குடும்பத்தினரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டியன். இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் பூச்சக்காடு கருவம்பாளையத்தை சேர்ந்த பிரியா(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் வெள்ளைப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியாவிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும், நகையையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் தன்னிடம் கூடுதலாக நகைகள் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு அடித்து துன்புறுத்தியாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோர்ட்டு உத்தரவுப்படி போடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வெள்ளைப்பாண்டியன் அவரது தந்தை ரவி, தாய் ெபாம்மி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணைக்கு போடி கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவை முக்கிய நீர்வழிப்பகுதிகளாக உள்ளன.
    • ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இப்பகுதி மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணைக்கு போடி கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவை முக்கிய நீர்வழிப்பகுதிகளாக உள்ளன.

    வருசநாடு பகுதியில் கூடம்பாறை, அரசரடி, வெள்ளிமலை, புலிக்காட்டு ஒடை, இந்திராநகர், பொம்முராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாைற, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மலைத்தொடர்களில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகளாக பெருகி மூலவைகையாக உருவெடுக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மூலவைகையில் நீர்வரத்து காணப்பட்டது. கோடைகாலம் தொடங்கியது முதல் மழை இல்லாததால் தற்போது மூலவைகையாறு முற்றிலும் வறண்டுவிட்டது. கடமலை, மயிலை ஒன்றியத்தில் ஆத்தங்கரைபட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்ெதாழு, மந்திச்சுனை, முருக்கோடை, நரியூத்து, பாலூத்து உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகள் உள்ளன.

    இதில் மேகமலையை தவிர்த்து 17 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவை மூலவைகை மூலமே கிடைத்து வருகிறது. இதற்காக ஆற்றில் ஏராளமான உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இப்பகுதி மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மூலவைகையில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதில்லை. மழைக்காலங்களில் மட்டுமே நீரோட்டம் இருக்கும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் இங்குள்ள ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும் நிலையில் இந்த மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மலைக்கிராமங்கள் வருடத்தின் பல மாதங்கள் வறட்சியாகவே உள்ளது. எனவே இதனை போக்க தடுப்பணை அமைத்து நீரை தேக்கி நிரந்தர தீர்வு காணவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×