என் மலர்
தேனி
- 4 வயது சிறுமியை தோட்டத்தில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே தனது 4 வயது மகளுடன் ஒருவர் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுருளி ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் 4 வயது சிறுமியை தோட்டத்தில் இறக்கி விடுவதாக கூறி சுருளி ராஜ் தனது சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதையறிந்த சுருளிராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சுருளிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம்:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையே வலிமை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சசிகலா, தினகரனுடன் இணைய வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டனர். அப்போது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கொடியை ஏந்தி தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்ட செயலாளரான சையது கான், அ.தி.மு.க.வை வழி நடத்தும் முழு தகுதியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே உள்ளது. இதனை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிந்ததால்தான் அவருக்கு 2 முறை முதல்-அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியையே அபகரிக்க பார்க்கிறார்.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. வேறு யாரையும் அந்த இடத்துக்கு கட்சியினர் விரும்ப மாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் தனக்கு ஆதரவான சிலரை வைத்துக் கொண்டு பொதுச் செயலாளர் பதவியை அடைய துடிக்கிறார்.
தொண்டர்களால் மட்டுமே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். விரைவில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார். அதன் பிறகு தொண்டர்கள் பலத்துடன் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். பெரியகுளத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பலத்துடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
- முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் 2 படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
- 3 படகுகளில் உள்ள சிறிய அளவிலான பழுதுகளை பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேக்கடி புலிகள் காப்பம் மற்றும் படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை கண்டு ரசிப்பார்கள். இதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
ஏரியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 5 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 3 படகுகள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் 2 படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
கோடை விடுமுறையின் போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். எனவே 3 படகுகளில் உள்ள சிறிய அளவிலான பழுதுகளை பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படகுகள் சேவைக்கு கொண்டுவரப்படும் என்றனர்.
- வேலைக்கு செல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
சின்னமனூர் அருகே காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). இவர் சின்னமனூர் நகராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (53). இவர் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். பெருமாளுக்கு கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற ஈஸ்வரி வீடு திரும்பிய போது கணவர் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோடைவெயில் சுட்டெரித்து வந்ததால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வெப்பம் நிலவியது.
- முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 117.35 அடியாக உள்ளது.
கூடலூர்:
கோடைவெயில் சுட்டெரித்து வந்ததால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. வறட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது பெய்துவரும் திடீர் மழையால் ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 117.35 அடியாக உள்ளது. 160 கனஅடிநீர் வருகிறது. 256 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.84 அடியாக உள்ளது. 267 கனஅடிநீர் வருகிறது. 70 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.45 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 32.80 அடியாக உள்ளது. 7 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 1.2, உத்தமபாளையம் 2, வைகை அணை 18.4, சோத்துப்பாறை 28, மஞ்சளாறு 63, பெரியகுளம் 51, வீரபாண்டி 1.4, அரண்மனைப்புதூர் 2, ஆண்டிபட்டி 6.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.
- ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.
ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.
அதனைதொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர்ஜெயந்த் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெயந்த் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனைபடைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார். ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்தார். 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.
பைலட் பயிற்சியில் தேர்வுபெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார். 2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவகுடியிருப்பில் மேஜர்ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார்.
மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் தெரிவிக்கையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதேபோல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனைதொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன். அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்றார்.
- மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது அவரை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார். மேலும் அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
- புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள சுப்பன்தெருவைச் சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 42). இவருக்கும் சவுமியாதேவி (38) என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
விஜயசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் வீட்டுக்கு சரிவர பணம் கொடுக்காமல் தனது மனைவி மற்றும் குழந்தை களை அடித்து உதைத்து வந்துள்ளார். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து அவருக்கு ஜவுளிக்கடை வைத்து கொடுத்துள்ளார்.
தான் வரதட்சணையாக வாங்கி வந்த நகைகள் அனைத்தையும் விஜயசாரதி பறித்துக் கொண்டு செலவழித்து விட்டார். அவருக்கு ஆதரவாக சவுமியாவின் மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோரும் இருந்துள்ளனர்.
இது மட்டுமின்றி விஜயசாரதி தனது மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது அவரை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்று ள்ளார்.
தனது 2 குழந்தைகளுக்கும் சரிவர செலவு செய்யாமல் தன்னையும் கொடுமை படுத்தி வந்த விஜயசாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார். கோர்ட்டு உத்த ரவின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
- சாரல் மழை பெய்து வருவதால் நீண்டநாட்க ளுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாக வும்உள்ளது. கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்தநிலை யில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் நீண்டநாட்க ளுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 51 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 256 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 117.45 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.70 அடியாக உள்ளது. 2 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 24.92 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 36, தேக்கடி 10.8, போடி 1.8, மஞ்சளாறு அணை 17, சோத்துப்பாறை 14, பெரியகுளம் 36 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- தனியார் எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
- வனத்துறை யினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலை - மயிலை ஒன்றியம் மேகமலை வனச்சரகத்தி ற்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தற்போது கடும் கோடை வெயில் காரணமாக யானைகள் அடிக்கடி இடம்பெயர்ந்து வந்த வண்ணம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தை மறித்து யானை மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்திரா நகர் மலை கிராமத்தில் இருந்து பொது மக்கள் தனியார் எஸ்டேட்டு க்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
அங்குள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து மேகமலை வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. நேற்று மாலை வெகு நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் அங்கு செல்வ தில் சிரமம் ஏற்பட்டது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத ஒற்றையடி ப்பாதை யாகும்.
இதனால் இன்று சம்பவ இடத்துக்கு சென்று அதிகாரிகள் விசா ரணை நடத்த முடிவு செய்த னர். அதன்படி வனத்துறை யினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்து வர்கள் அங்கு சென்று யானை எவ்வாறு இறந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த யானை வயது முதிர்வின் காரண மாக கடந்த சில நாட்க ளாகவே நடக்க முடியாமல் இருந்து வந்தது. அதன் காரணமாக இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசா ரித்து வருகின்றனர்.
- மேகமலை அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
- நவீன தீயணைக்கும் கருவிகள் கொண்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. கோடை காலங்களில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவது வழக்கம். அதுபோன்று காட்டுத்தீ ஏற்படும் நேரங்களில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்து வருகின்றனர்.
நேற்று மேகமலை அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த பகுதியில் காய்ந்த புற்கள் அதிக அளவில் இருந்ததால் காட்டுத்தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதில் ஏராளமான மரங்கள் தீயில் கருகி வீணானது. தொடர்ந்து அந்தப் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பஞ்சம் தாங்கி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதற்கிடையே வனத்துறை யினரிடம் தீயை அணைக்க நவீன கருவிகள் எதுவும் இல்லை. தற்போது வரை மரக்கிளைகள் பயன்ப டுத்தியே தீயை அணைக்கும் நிலை காணப்படுகிறது. சிறிய அளவிலான தீ விபத்துக்கள் என்றால் மரக்கிளைகளை வைத்து தீயை அணைப்பது சாத்தியம். ஆனால் பெரிய அளவிலான தீ விபத்துக்கள் ஏற்படும் போது மரக்கிளைகளை வைத்து தீயை அணைப்பது சாத்திய மற்றதாகும்.
எனவே பெரிய அளவி லான தீ விபத்து ஏற்படு ம்போது வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் வனத்துறை அலுவலகங்களில் பணியா ளர்கள் பற்றா க்குறையும் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டுத்தீ அபாயம் அதிகரி த்துள்ளது. எனவே நவீன தீயணைக்கும் கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல் அதிகம் காட்டுத்தீ ஏற்படும் இடங்களை கண்காணித்து அந்த பகுதி களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம், கடமலை - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட கண்டமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ- மாணவிகளின் எண்ணி க்கை, காலை உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களின் இருப்பு, சமையல் பாத்திரங்களின் எண்ணிக்கை, தண்ணீர் வசதி, மின் வசதி, வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவிகளின் கல்வி யினை ஊக்கப்படு த்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட வும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட உத்தர விட்டு செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட கடமலை - மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு தொடக்க ப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை தினந்தோறும் அரசின் அட்டவணைப்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கிட தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது என தெரி வித்தார்.
அதனைத்தொடர்ந்து கண்டமனூர் ஊராட்சி க்குட்பட்ட புதுராமசந்தி ராபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வீரகாளியம்மன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக நிறுத்தியுள்ளனர்.
- பொதுமக்கள் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு முழுமையான குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோத்துப்பாறை அணை. இந்த அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீரை சேமித்து வைக்கப்படும் நீர் நகராட்சி பகுதி மக்களுக்கான குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அணையில் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால் அணை நீர் முழுமையாக வற்றியது.
இதனால் அணையில் மிகவும் குறைவாக இருந்த நீரில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் செம்மண் கலந்த கலங்கிய குடிநீரை விநியோகம் செய்து வந்தது.
இந்நிலையில் மேலும் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக நிறுத்தியுள்ளனர். பெரியகுளம் பகுதியில் முழுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து 25 லிட்டர் கொண்ட குடிநீர் கேன் முன்பு 30 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது 40 ரூபாய் வரை விலையேற்றம் செய்து விற்று வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோடு தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து கொண்டு வரப்படும் 25 லிட்டர் குடிநீர் கேன் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்த உடனே விற்று தீர்ந்து விடுகிறது.
மேலும் நகராட்சி நிர்வாகத்தில் இருந்து தற்போது 30 வார்டு பகுதிகளுக்கும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி பொதுமக்கள் கூறுகையில்; 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வந்ததே கிடையாது. தற்பொழுது செயற்கையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணையில் இருக்கும் நீரை கோடை காலங்களில் குடிநீருக்கு மட்டும் தேவைக்கேற்ப திறந்து விட வேண்டிய பொது ப்பணித்துறை அதிகாரிகள், தொடர்ச்சி யாக பிப்ரவரி மாதத்தில் 80 அடி வரை திறந்து விட்டதே தற்போதை ய தட்டுப்பாட்டிற்கு காரணமாகும்.
தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொதுமக்களை அலை க்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தினந்தோறும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.






