என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanliness guard committed suicide"

    • வேலைக்கு செல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    சின்னமனூர் அருகே காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). இவர் சின்னமனூர் நகராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (53). இவர் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். பெருமாளுக்கு கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற ஈஸ்வரி வீடு திரும்பிய போது கணவர் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×