என் மலர்
நீங்கள் தேடியது "செக்ஸ் கொடுமை"
- மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது அவரை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார். மேலும் அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
- புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள சுப்பன்தெருவைச் சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 42). இவருக்கும் சவுமியாதேவி (38) என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
விஜயசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் வீட்டுக்கு சரிவர பணம் கொடுக்காமல் தனது மனைவி மற்றும் குழந்தை களை அடித்து உதைத்து வந்துள்ளார். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து அவருக்கு ஜவுளிக்கடை வைத்து கொடுத்துள்ளார்.
தான் வரதட்சணையாக வாங்கி வந்த நகைகள் அனைத்தையும் விஜயசாரதி பறித்துக் கொண்டு செலவழித்து விட்டார். அவருக்கு ஆதரவாக சவுமியாவின் மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோரும் இருந்துள்ளனர்.
இது மட்டுமின்றி விஜயசாரதி தனது மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது அவரை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்று ள்ளார்.
தனது 2 குழந்தைகளுக்கும் சரிவர செலவு செய்யாமல் தன்னையும் கொடுமை படுத்தி வந்த விஜயசாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார். கோர்ட்டு உத்த ரவின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






