என் மலர்tooltip icon

    தேனி

    • தேனியில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி:

    தேனி அருகே கொடு விலார்பட்டியில் ஒரு சமுதாயத்தினர் சார்பில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரங்கராஜ் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜை கள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கோவி லில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.5000 பணம் திருடப்பட்டி ருந்தது.

    இதுகுறித்து பால முருகன் என்பவர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கேரளாவில் பெய்த மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 50 கனஅடியில் இருந்து 259 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்க ளாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கேரளாவில் பெய்த மழையால் முல்லை பெரி யாறு அணைக்கு நீர்வரத்து 50 கனஅடியில் இருந்து 259 கனஅடியாக உயர்ந்துள்ளது. 256 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது. 106 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 43.29 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 14.6, தேக்கடி 1.4, கூடலூர் 1.2, சண்முகா நதி 2, போடி 1.4, சோத்து ப்பாறை 1.6, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியுடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    இந்திய விமானப்படை யில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் வரும் 31-ந் தேதிக்குள் விண்ண ப்பிக்க வேண்டும். இந்த தேர்வு மே மாதம் 20-ந் தேதி ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

    10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதி உடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பாக 26.12.2002 அன்றும் மற்றும் அதற்குப்பின் பிறந்தவர்கள், 26.06.2006 அன்றும் மற்றும் அதற்குமுன் பிறந்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்விற்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்கள் மேலும் விபரங்களுக்கு தேனி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி ஆண்டிபட்டி அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா என்பவருக்கும் வைகை நகரை சேர்ந்த கவின் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே நிவேதா தனது குழந்தையுடன் தர்மராஜ புரத்தில் உள்ள தந்ைத வீட்டிற்கு வந்து விட்டார். இதனைத் தொடர்ந்து கவின் மற்றும் அவரது பெற்றோர் தர்மராஜபுரத்துக்கு சென்று எனது குழந்தையை எப்படி தூக்கிவரலாம் என தகராறு செய்தனர். மேலும் குழந்தை யை தூக்கிக்கொண்டு வைகை நகருக்கு வந்து விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நிவேதாவின் தந்தை ஜெய க்குமார் மற்றும் உறவினர்கள் மீண்டும் வைகை நகருக்கு வந்து குழந்தையை எடுத்துச் செல்ல வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்ட னர்.

    இதில் கவினின் உறவின ர்களான சின்னமனூர் ஓவுலாபுரம் இந்திரா காலனியை சேர்ந்த நல்லசாமி (வயது28), சிலம்பரசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டனர்.

    நல்லசாமி நிலைமை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். அதன் பேரில் ஜெயக்கு மாரின் மனைவி செல்வி, மகன் கோகுல் மற்றும் தாய் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ள்ளது.

    இதபோல் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன், கவிதா, கவின், பிரசாந்த், நிஷாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தேனியில் சரக்கு வாகனம் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கோம்பை திரு.வி.க. தெருவைச் சேர்ந்த சின்ன மாரி முத்து மகன் சிலை ராஜா (வயது 32). மரம் வெட்டும் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கோம்பை - உத்தமபாளையம் சாலையில் குடிசை மாற்று வாரிய கட்டிடத்துக்கு எதிரே சென்று கொண்டு இருந்த போது அவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சதீஸ்குமார் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. 50கன அடிநீர் வருகிறது. 256 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.

    163 கன அடிநீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது.

    10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை 9.8, போடி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
    • ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமிதாசிவக்குமார் உள்ளார். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டதால் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எப்போதும் வறட்சியே ஏற்படாத பெரியகுளம் நகரில் வேண்டுமென்றே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஆணையாளரின் செயல்பாடே காரணம் என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் இன்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்து உறுப்பினர்களும் சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் ஆணையாளர் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் கோசமிட்டபடி இருந்தனர்.

    ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார். அவரை வெளியேற விடாமல் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணையாளருடன் சுகாதார ஆய்வாளர், மேலாளர் ஆகியோரும் மன்றத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் ஆணையாளர் உரிய விளக்கம் அளிக்கும் வரை உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டோம் என நகராட்சி அரங்கிலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் சுமிதா ஆணையாளருடன் பேசி மன்றத்திற்கு வந்து விளக்கம் அளித்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து வராததால் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    • கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல்
    • வெயில் காரணமாக திராட்சை பழுக்க கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படுகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி பகுதியில் விதை இல்லா திராட்சையும் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 2 முறை அறுவடை பணி நடக்கிறது. தேனி மாவட்டத்தில் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக திராட்சை அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால் இங்கு ஒயின் தொழிற்சாலையும் உள்ளது.

    நாட்டிலேயே மகாராஷ்டி ராவில் கூட ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை பணி நடக்கும் நிலையில் தேனி மாவட்டத்தில் சுவை மிகுந்த திராட்சை 2 முறை அறுவடை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நவம்பர் முதல் மே மாதம் வரை மகாராஷ்டிராவில் இருந்து விதை இல்லா திராட்சை வரத்து இருக்கும். அந்த சமயங்களில் பன்னீர் திராட்சைக்கு விலை இருக்காது.

    இந்த ஆண்டும் பன்னீர் திராட்சை கொள்முதல் விலை கிலோ ரூ.25 ஆக உள்ளது. தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் திராட்சை பழங்கள் அதிக அளவு விற்பனையாகும். பழச்சாறு கடைகளிலும் திராட்சைக்கு முதலிடம் இருக்கும். ஆனால் வெயில் அதிகரிப்பின் காரணமாக திராட்சை பழுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ரம்ஜான் பண்டிகை தொடங்கியுள்ள நேரத்தில் சில்லறையில் திராட்சை ரூ.90 வரை விற்கப்படுகிறது. ஆனால் வெயில் காரணமாக திராட்சை பழுக்க கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படுகிறது.

    120 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பழங்களு க்கு தற்போது 140 நாட்கள் வரை ஆகிறது. மழை பெய்து காற்று வேகமாக அடித்தால் விரைவாக பழுக்கும் நிலை உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ள நேரத்தில் பழங்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவ சாயிகள் கவலையடைந்து ள்ளனர்.

    • கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேல்வாலிப்பாறை கிராமத்தில் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொடர் பீதியில் உள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மேல்வாலிப்பாறை வருசநாடு வனச்சரகத்தை ஒட்டிய பகுதியாகும். இங்கு குறைந்த அளவு குடியிருப்புகள் உள்ளபோதும் மலைப்பகுதியிலேயே தங்கி அவர்கள் விவசாய பணிகள் செய்து வருகின்றனர். தற்போது கடும் கோடைகாலம் நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்புக்குள் வரத்தொடங்கி உள்ளன.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் உள்ளதால் மேல்வாலிப்பாறை கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உணவுக்காக வரும் கரடிகள் வீட்டு சுவற்றை சுரண்டி ஓட்டைப்போட்டு உள்ளே வர முயற்சி செய்கின்றன. அதனை கற்களை கொண்டு பொதுமக்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தபோதும் இரவு முழுவதும் தூக்கமின்றி அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். எனவே கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, மேல்வாலிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு கரடிகள் வசிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாப்பிடும் கரடிகள் தண்ணீருக்காக குடியிருப்பை நோக்கி வருகின்றன.

    மேலும் இவர்கள் வசிக்கும் வீடு மண் சுவர் என்பதால் கரையானை தேடி சுவற்றை சுரண்டி வருகின்றன. இவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கடந்த மாதம் ஆண்டிபட்டி அருகே ஒரு வீட்டிற்குள் கரடி புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அதனை போராடி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    தற்போது மேல்வாலிப்பாறை கிராமத்திலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொடர் பீதியில் உள்ளனர்.

    • வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அப்துல்காதர் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் ருக்மான்அலியை குத்தி கொன்று விட்டு தப்பி ஓடினர்.
    • விடுதியில் தங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி பஸ்நிலைய பின்புறத்தில் தனியார் விடுதியுடன் கூடிய மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் குமுளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவருடன் வந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் குமுளி ரோசாப்பூகண்டம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ருக்மான்அலி (வயது40) என தெரிய வந்தது.

    இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த அலியார் மகன் அப்துல்காதர் (23), குமுளி ரோசாப்பூகண்டத்தை சேர்ந்த மணிமாறன் மகன் அஜித் (22) ஆகியோருடன் நீண்ட நேரம் மதுபானம் குடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அப்துல்காதர் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் ருக்மான்அலியை குத்தி கொன்று விட்டு தப்பி ஓடினர். அங்கிருந்து யாருக்கும் தெரியாத வகையில் விடுதியில் தங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

    தேனி:

    தேனி மாவட்டம் ஊத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 70). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 வருடங்களாக முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மரம், செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால், மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டாலும், கண்மாயில் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • நீரை தேக்கி வைத்தால் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலப்பரப்பளவில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்டமனூர் பெரிய ஓடையில் இருந்து கண்மாய்க்கு வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தனி நபர்கள் சிலர் கண்மாயில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மற்ற பகுதிகள் அனைத்திலும் மரம், செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டாலும் அதனை கண்மாயில் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கண்மாயில் ஆக்கிரமி ப்புகளை அகற்றி முழுமை யாக நீரை தேக்கி வைத்தால் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் நீங்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதுக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×