என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!
- தேனியில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி:
தேனி அருகே கொடு விலார்பட்டியில் ஒரு சமுதாயத்தினர் சார்பில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரங்கராஜ் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜை கள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கோவி லில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.5000 பணம் திருடப்பட்டி ருந்தது.
இதுகுறித்து பால முருகன் என்பவர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
Next Story