என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female elephant died"

    • தனியார் எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
    • வனத்துறை யினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலை - மயிலை ஒன்றியம் மேகமலை வனச்சரகத்தி ற்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தற்போது கடும் கோடை வெயில் காரணமாக யானைகள் அடிக்கடி இடம்பெயர்ந்து வந்த வண்ணம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தை மறித்து யானை மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்திரா நகர் மலை கிராமத்தில் இருந்து பொது மக்கள் தனியார் எஸ்டேட்டு க்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    அங்குள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து மேகமலை வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. நேற்று மாலை வெகு நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் அங்கு செல்வ தில் சிரமம் ஏற்பட்டது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத ஒற்றையடி ப்பாதை யாகும்.

    இதனால் இன்று சம்பவ இடத்துக்கு சென்று அதிகாரிகள் விசா ரணை நடத்த முடிவு செய்த னர். அதன்படி வனத்துறை யினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்து வர்கள் அங்கு சென்று யானை எவ்வாறு இறந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த யானை வயது முதிர்வின் காரண மாக கடந்த சில நாட்க ளாகவே நடக்க முடியாமல் இருந்து வந்தது. அதன் காரணமாக இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசா ரித்து வருகின்றனர்.

    ×