என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் மாயம்
- தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகள் சுவாதி(17). இவர் ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது தோழியின் திருமணத்திற்கு சென்றுவருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூம்பாறையை சேர்ந்த மோகன் மகள் பவானி(19). தேனி தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார் சம்பவத்தன்று தேனி புதிய பஸ்நிலையத்தில் தனது தந்தையுடன் நின்று கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கோம்பை டி.வி.கே.தெருவை சேர்ந்த சின்னதம்பி மகள் பிரியதர்ஷினி (17). இவர் தேவாரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தேவாரம் போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அவர்களை மீட்டனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றபோது பிரியதர்ஷினி மாயமானார். இதுகுறித்து கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






