என் மலர்
தேனி
- மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
- அணையின் உறுதி தன்மை குறித்தும் அவர்கள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய நீர் வள ஆணைய முதன்மை பொறியாளர் தலைமையிலான கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு மத்திய நீர் வள ஆணையர் செயற்பொறியாளர் சதீஸ் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
துணைக்குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி அணையின் நீர் மட்டம் 127.75 அடியாக இருந்த போது துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 117.8 அடியாக குறைந்துள்ளது.
மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். எனவே பருவ மழைக்கு முன்னாள் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து துணைக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். மேலும் பேபி அணை, கேலரி, நீர் கசிவு பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
மேலும் அணையின் உறுதி தன்மை குறித்தும் அவர்கள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதன் அறிக்கையை மத்திய குழுவிற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தற்போது அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 53.15 அடியாக உள்ளது. 70 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 43.10 அடியாக உள்ளது. 32 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 89.21 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர்.
- ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கள்ளர் மண்டபரம் அருகே 2 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். போலீசாரைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
மற்றொரு பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர் சமயன் மனைவி மல்லிகா (வயது 47) என தெரிய வந்தது. மல்லிகாவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ ராணி என்பவரை தேடி வருகின்றனர்.
- இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைவேவிஸ் மணலாறு பகுதியில் உள்ள ரேசன் கடைக்குள் புகுந்த யானை கடையை உடைத்து சென்றுள்ளது.
- யானை வந்த வழித்தடத்தை உறுதி செய்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
சின்னமனூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதியில் 8 பேரைக் கொன்ற அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து தேக்கடி அருகே உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி விட்டனர். ஆனால் மறுநாளே தமிழக வனப்பகுதிகளான மாவடி, வண்ணாத்திப்பாறை பகுதிகளுக்குள் அரிசிக் கொம்பன் புகுந்தது. அதன் பின் தமிழக வனப்பகுதியான இரவங்கலாறு பகுதிக்குள் அரிசி கொம்பன் புகுந்தது. அங்கிருந்து ஹைவேவிஸ், மணலாறு, தேயிலை தோட்டப்பகுதிகள், அதனை ஒட்டிய வனப்பகுதி களுக்குள் புகுந்தது.
மேலும் இரவு நேரத்தில் மலைச்சாலையில் வந்த அரசு பஸ்சையும் மறித்தது. பொதுமக்கள் யாரையும் தாக்காத நிலையில் கடந்த 5 நாட்களாக சண்முகா நதி அணைக்கு தண்ணீர் வரும் புத்துக்காடு பகுதிக்கு கீழ் உள்ள மரங்கள் அடர்ந்த வனத்தில் அரிசி கொம்பன் இருந்ததாக வனத்துறை யினர் தெரிவித்தனர்.
கடும் வெப்பம் காரணமாக பகலில் இங்கு ஓய்வு எடுக்கும் இந்த யானை மாலை நேரங்களில் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவு தேடும் பழக்கத்தை கையாண்டது. அரிசி கொம்பனுடன் தற்போது மேலும் 2 பெண் யானைகள் இருப்பதாக வனத்துறை யினர் உறுதி செய்தனர்.
இதனால் யானையின் வேகம் குறைந்து சாந்தமாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைவேவிஸ் மணலாறு பகுதியில் உள்ள ரேசன் கடைக்குள் புகுந்த யானை கடையை உடைத்து சென்றுள்ளது. யானை வந்த வழித்தடத்தை உறுதி செய்த அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறை யின ருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் குடியிருப்பு, ரேசன் கடைகளை சேதப்படுத்தி வருவதால் தொடர்ந்து பதட்டமான சூழலில் மக்கள் உள்ளனர்.
- பக்தர்கள் போர்வையில் கோவிலுக்கு வரும் கும்பல் அவர்களது பணம் மற்றும் நகையை பறித்துச் செல்வதை தொடர்ந்து அரங்கேற்றி வந்தனர்.
- கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் சேர்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டவர்கள் யாரை யும்கைது செய்யவில்லை.
தேனி:
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. பக்தர்கள் போர்வையில் கோவிலுக்கு வரும் கும்பல் அவர்களது பணம் மற்றும் நகையை பறித்துச் செல்வதை தொடர்ந்து அரங்கேற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) என்பவரிடம் வழிப்பறி செய்த கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (40), தாடிச்சேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜிடம் பணம் பறித்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாரியப்பன் (59), திருப்பூர் சிவசாமியிடம் பணம் திருடிய கம்பம்எஸ்.டி.கே. நகரைச் சேர்ந்த அஜித்குமார் (24), பூசல்பட்டி சொசைட்டி தெருவைச் சேர்ந்த அஜித்கு மார், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த குமரேசனிடம் பணம் பறித்த கம்பம் ஜவுளிக்கடை வீதியைச் சேர்ந்த நாகராஜன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் சேர்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதள ங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது வரை மோதலில் ஈடுபட்ட யாரை யும் கைது செய்யவில்லை.
பிரசித்தி பெற்ற வீரபாண்டி திருவிழாவுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கி ன்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் வழிப்பறி செய்வது மற்றும் மோதலில் ஈடுபடும் சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
- அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களிடம் இருந்த 90 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டன
- பெரியகுளம் பகுதியில் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை போலீசாருக்கு சிலர் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழவடகரை மற்றும் வடகரை பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்க பாண்டி மற்றும் சுரேஷ் ஆகிய 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களி டம் இருந்த 90 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டன. இதே போல் பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி மற்றும் டி.கள்ளிபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்ச கொடி மற்றும் யோகேந்திரன் ஆகிய 2 வாலிபர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்கு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகுளம் பகுதியில் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
- பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தேனி:
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் (வயது 47). கார் டிரைவர். அவருடைய மனைவி கிருஷ்ணமாலா. இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று சுற்றுலா சென்றார். அங்கு அருவியை சுற்றியுள்ள இடங்களை கண்டு களித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர்.
இதைத்தொடர்ந்து பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.
இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக இறந்தார். தங்களுடன் நடந்து வந்த பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி பெமினாவின் பெற்றோர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். பின்னர் சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் குடியிருந்த அவர்கள், தங்களது பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலையின் காரணமாக சென்னை நீலாங்கரையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா சென்ற இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது.
- தற்போது உள்ள கழிப்பறையை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும் குடிமகன்கள் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை கழிப்பறை அருகேயே உடைத்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் கால்களை பீங்கான்கள் பதம் பார்க்கின்றன. தினசரி 500க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் போதுமான கழிப்பறை வசதி இல்லாத தால் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் போதுமான கழிப்பறைகள் அமைக்க வேண்டும். தற்போது உள்ள கழிப்பறையை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுருளிபட்டி சாலை அருகே முல்லை பெரியாற்று யானைகஜம் பகுதியில் குளிக்க சென்றார்.
- நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் சையது சுல்தான் இப்ராகிம் மகன் முகமது ராஜிக். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளனர். விடுமுறைக்காக அவர்கள் குடும்பத்தினர் கம்பத்திற்கு வந்தனர்.
அப்போது முகமது ராஜிக் சுருளிபட்டி சாலை அருகே முல்லை பெரியாற்று யானைகஜம் பகுதியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கு அவர் சேரில் அமர்ந்த நிலையி லேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்த வர் சரவணக்குமார் (வயது 39). சாலை பணியாளர்.இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில் அபிநயா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகன் உள்ளான். இந்த நிலையில் அபிநயா தனது குழந்தை யுடன் மயிலாடு ம்பாறையில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டார். சரவ ணக்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கு சரவணக்குமார் சேரில் அமர்ந்த நிலையி லேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த சரவணக்குமாரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழாவில் முக்கிய நிகழ்ச்சி யான திருத்தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
- தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீர பாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திரு விழாவில் முக்கிய நிகழ்ச்சி யான திருத்தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
திருவிழாவில் சிறப்பு பஸ்கள் உள்பட ஏராளமான வசதிகளை அரசு செய்துள்ளது. மேலும் வருகிற 16-ந்தேதி வரை பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை போலீசார் நியமிக்க ப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவிலுக்குள் சென்று வர தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்களுக்கு புலப்படும் வகையில் அறிவிப்பு பலகைகளும், ஒலிபெருக்கி யின் மூலமும் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீர பாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பி டித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய்பாபு, எஸ்.பி பிரவீன்உமேஷ்ேடாங்கரே, வருவாய் அலுவலர் ஜெய பாரதி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இவர் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வந்துள்ளார்.
- திடீரென வீட்டில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேனி:
தேனி அருகே கருவேல நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 23). இவர் போடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வந்துள்ளார். நேற்று திடீரென வீட்டில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தாய் ஒச்சம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
- அவரை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.
தேனி:
தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன்ராஜன் (வயது 34). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கனகராஜன் மகள் சூர்யகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சூர்யகலா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவர்களை பார்க்க கந்தன்ராஜன் மாமனார் வீட்டிற்கு சென்றார். தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
இதில் இருதரப்பின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கந்தன்ராஜனை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கனகராஜன் உள்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கந்தன்ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






