என் மலர்
தேனி
- குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர்.
- உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய்ய க்கூடாது உள்ளிட்ட தீர்மா னங்களை விவசாயிகள் தெரிவித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உத்தம பாளையம் கோட்டா ட்சியர் தலைமையில் இலவம் பஞ்சு விலை நிர்ணயம் தொட ர்பான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த இலவம் பஞ்சு வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் தமிழகத்தில் 90 சதவிகிதம் இலவம் பஞ்சு தேனி மாவட்டத்தில் உற்ப த்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 2000 லோடு பஞ்சு உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலவம்பஞ்சு சராசரியாக ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது. இதனால் இலவம்ப ஞ்சு விவசாயி களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவில் வருவாய் கிடைத்தது. இந்தச் சூழ்நிலையில் உள்ளூர் வியாபாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து பஞ்சு விலையை ரூ.60க்கும் கீழ் குறைத்து நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.80 வரை இலவம் பஞ்சு விற்பனை ஆகிறது. பஞ்சு விலை குறைவிற்கு உள்ளூர் வியாபாரிகளே முக்கிய காரணமாக உள்ளனர். எனவே இலவம் பஞ்சு விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு கிலோ ரூ.100 என அரசு விலை நிர்ணயம் செய்து காதி கிராப்ட் மூலம் விவசாயிகளிடம் கொ ள்முதல் செய்யவேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் பஞ்சு இருப்பு வைக்க வசதியாக குடோன்கள் கட்டிக் கொடுக்க வேண்டும், உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய்ய க்கூடாது என வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்களை விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அடுத்த கூட்ட த்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் அன்பு ஊருக்கு வந்தார்.
- ஆத்திரமடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் பிரதான சாலையைச் சேர்ந்த அன்னக்கொடி மனைவி விஜயா. இவர்களுக்கு சிவன் காளை (வயது 32), அன்பு (28) என்ற 2 மகன்களும், கனி (25) என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். சகோதரர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. சிவன் காளை உள்ளூரிலேயே கூலி வேலை பார்த்து வந்தார். அன்பு கோவையில் இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் அன்பு ஊருக்கு வந்தார். நேற்று தனது தாய் விஜயாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனை சிவன் காளை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணனை குத்திக்கொன்ற அன்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிறுத்தப்பட்ட பணி மீண்டும் தொடங்கினால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கில் ஏற்படும் நிலை உள்ளது.
- வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மதுரை, தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயராமல் உள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது லோயர்கேம்ப் அருகே குருவனூற்று பாலம் வண்ணாந்துறை பகுதியில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றது. ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த பணிகடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பணி மீண்டும் தொடங்கினால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கில் ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.05 அடியாக உள்ளது. 205 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.07 அடியாக உள்ளது. 56 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. 12 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- போடி புதூரில் கர்னல்ஜான் பென்னிகுக் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை உள்ளது.
- சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி புதூரில் கர்னல்ஜான் பென்னிகுக் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் மூடைகள் அரிசி, பருப்பு சாக்குகளும், புத்தக பாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்து.
சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இதுகுறித்து வங்கியின் செயலாளர் ராமகிருஷ்ணன் போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
பெரியகுளம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரிய வீரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் வாலிபர் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
- பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் ஆலமரத்தெருவை சேர்ந்த இருளப்பன் மகன் பிரபாகரன்(30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மீனா கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபாகரன் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
அவர் அருகே பூச்சிமருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இதுகுறித்து பிரபாகரனின் தாய் போதுமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 8 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணி காலியாகவே உள்ளது. 8 ஊராட்சிகளுக்கும் அருகிலுள்ள கிராம ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பணி கவனித்து வந்தனர்.
இந்நிலையில் பணி வரன்முறையை அரசு ஆணையாக வெளியிடுதல், வருடம் முழுவதும் ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் உள்ள 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பணி பாதிப்படைந்துள்ளது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுகுறித்து டி.ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியன் கூறியதாவது, தற்போதைய நிலையில் ஊராட்சி செயலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஊராட்சி பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை.
மக்கள் பணிகளை நேரடியாக நாங்களே சென்று அவர்கள் குறை கேட்டு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை எவ்விதமான பாதிப்பும் ஊராட்சிகளில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
- மேகமலை அருவியில் இருந்து 4 ஊராட்சிகளில் உள்ள 75 கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
- குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.
வருசநாடு:
கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் இருந்து மேகமலை, சிங்கராஜபுரம், பொன்னன்படுகை, குமணன்தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் உள்ள 75 கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கிராமங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் அருவியில் இருந்து கோம்பைதொழு வரை அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நாளுக்கு நாள் குழாய்களில் சேதம் அதிகரித்து அதிக அளவிலான குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுக் குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேகமலை அருவியில் இருந்து கோம்பைத்தொழு வரையிலான குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி வருகிறது.
- கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொட்டகுடி ஆறு, ராஜ வாய்க்கால் மூலம் இந்த குளத்திற்கு நீர் நிரப்பப்படு கிறது. இந்த குளத்திற்கு வரும் ராஜ வாய்க்காலில் போடி பகுதியில் உள்ள கழிவு நீர் கலந்து கண்மாய்க்கு வருவதால் இந்த நீரானது மாசடைந்து குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி வருகிறது.
இறந்து கரை ஒதுங்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி தண்ணீர் மேலும் மாச டைந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த சுத்தமான நீரானது கழிவு நீராகவே இந்த கண்மாய்க்கு வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், தற்போது மீன்கள் செத்து விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும் மாசடைந்த நீர் நிலையை சுத்திகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 21ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.
- பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 21ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கவுகாத்தி, ஹைதராபாத், புனே, கொச்சின், சென்னை, புதுடெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம், லோனா வாலா, தெலுங்கானா, வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து கூடை பந்தாட்ட வீரர்களை கொண்ட 24 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியுடன், உடுமலைப்பேட்டை கூடை பந்தாட்ட கழக அணி மோதியதில், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் போடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நெல்லை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் போடி அணி 76க்கு 58 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 3வதாக நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணியுடன், சில்வர் ஜூப்ளி கிரீன் அணி மோதியதில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணி 101க்கு 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
மேலும் சென்னை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக அணிக்கும், கம்பம் பெனிக்குவிக் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக அணி 91க்கு 31 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
- கமலேஸ்வரனுக்கு பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
- கமலேஸ்வரனும், மாணவியும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்தனர்.
தேனி:
தேனி அருகே உள்ள சின்னம்மாள்புரம் சன்னாசியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் கமலேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற கமலேஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவனின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.
நேற்று இரவு வீட்டுக்கு அருகே உள்ள காலி இடத்தில் கமலேஸ்வரன் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து அவரது தாய் ஊஞ்சம்மாள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது குறித்து மாணவனின் தாய் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கமலேஸ்வரனும் பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கமலேஸ்வரனும், அந்த மாணவியும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்தனர். இதனிடையே அந்த காதல் விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து கமலேஸ்வரனை கண்டித்து இனிமேல் தனது மகளுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்து சென்றனர். அதன் பிறகும் மாணவர் தொடர்ந்து தனது காதலியுடன் பேசி வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தையான போடேந்திரபுரம் காளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் சன்னாசி என்பவர் மாணவனின் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு கமலேஸ்வரனை அழைத்துக் கொண்டு நான் மாணவி வீட்டுக்கு சென்றேன்.
அப்போது சன்னாசி உன் மகனை கண்டித்து வை. படிக்கும் காலத்திலேயே என் மகளுடன் காதல் செய்து வருகிறான். இனியும் தொடர்ந்தால் உன் மகனை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து செல்போனை வாங்கிக் கொண்டு எனது மகனையும் அழைத்துக் கொண்டு நான் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்நிலையில்தான் எனது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே எனது மகனை அவர்கள்தான் கொலை செய்திருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோரை தேடிச் சென்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து சன்னாசி மற்றும் அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல்லில் அலுவலக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது
தேவதானப்பட்டி:
உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் மேலசிந்தலைச்சேரியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 32). இவர் கொடைக்கானல் தோட்ட க்கலைத்துறையில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல்லில் அலுவலக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
வத்தலக்குண்டு - பெரியகுளம் சாலையில் வந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.






