என் மலர்
நீங்கள் தேடியது "Handover of drinking water project works"
- இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
- கூடலூர் நகர பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினசரி 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கூடலூர்:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1955-ம் ஆண்டு கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அங்கு குடிநீரேற்றுநிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத் திட்டம் மூலம் கூடலூர், கம்பம் , உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு வினி யோகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக குறைந்த அளவு தண்ணீர் திறக்க ப்படும். அந்த நேரங்களில் கம்பம், கூடலூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோடை காலத்தில் கூடலூர் நகர ப்பகுதிகளில் தடையில்லா குடிநீர் வழங்க கூடலூர் நகராட்சி உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி மற்றும் இயக்குதலும் பராமரித்தலும் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்ப டுத்தப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி நேற்று கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
குடிநீர்வடிகால்வாரிய உதவிபொறியாளர் ராஜேஷ், கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன் துரை, நகராட்சி ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோரிடம் பொறுப்புக்கான ஆணையை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் கூடலூர் தி.மு.க நகரசெயலாளர் லோகந்துரை, நகராட்சி மேலாளர் ஜெயந்தி, மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டம் மூலம் கூடலூர் நகர பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினசரி 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனால் கூடலூர் நகர பகுதி மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்படும் என அதிகாரகள் தெரிவித்தனர்.






