என் மலர்
தேனி
- தேனி அருகே வெவ்வேறு பிரச்சினையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தேவா ரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் மகன் அய்யனார் (வயது21). இவர் சிந்தலைச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்ல பைக் வேண்டும் என பெற்றோ ரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் பொருளாதார வசதி இல்லை. படித்து முடித்தவுடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதனால் மனவேதனை யடைந்த அய்யனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது57). இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போது முதல் மன உளைச்சலில் இருந்த தங்கத்துரை விஷம் அருந்தி மயங்கினார். கடமலை க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கத்துரை உயிரிழந்தார். இது குறித்து கடமலை க்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயமங்கலத்தை சேர்ந்த வர் சின்னச்சாமி (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சின்னசாமி சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பலத்த காற்று வீசியதால் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
- பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(65). சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வெவ்வேறு 3 பெண்கள் மாயமானதையொட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் நித்ய ஸ்ரீ(21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை. படித்தது போதும் என கூறியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த நித்யஸ்ரீ திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் வேல்பாண்டி மகள் ஷீலாதேவி(21). இவர் பி.பி.ஏ, படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடை க்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஷீலா தேவியை தேடி வருகின்றனர்.
கம்பம் சுருளிபட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகள் கனகவள்ளி(24). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.
- சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கோம்பை அணைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர்மீது தேனி, கோம்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
மேலும் அடிக்கடி இரட்டை மாட்டுவண்டி பந்தயமும் நடத்தி வந்துள்ளார். இதனால் சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அவர் அரண்மனைத்தெரு குளம் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சதீஸ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் மாட்டு வண்டியில் இருந்த அச்சாணிக்கட்டை, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் இரும்புக்கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் 9 பேர் கொண்ட கும்பல் சதீஸ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கக்கன்ஜி காலனியை சேர்ந்த மணிகண்டன், திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரவீண், தீபக், கிராம சாவடி தெருவை சேர்ந்த புகழேந்தி ஆகிய 4 பேரை கைது செய்து சூர்யா உள்பட மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
- அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார்.
- கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின்படி போதை ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்புபடையினர் விரைந்து சென்று 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கருப்பையாவை கைது செய்தனர். போடி மற்றும் மலையடிவார பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
- மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தநிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற போது மதுஅருந்தி வந்துள்ளார்.
- இதனால் மனஉளைச்சலில் இருந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன்தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரோகேஷ்(20), அஸ்வந்த்(19) என 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றனர். அப்போது ஜெயக்குமார் மதுஅருந்தி வந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த மகன் ரோகேஷ் தனது தந்தையை கண்டித்துள்ளார். மேலும் மனஉளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டுக்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
க.விலக்கு அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் வீரபுத்ரன்(70). இவர் தோட்டத்து வீட்டில் தனது மனைவியுடன் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த வீரபுத்ரன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.
- முன்னாள் பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேர் செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் என முறைகேட்டில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்டம் திருமலாபுரம் ஊராட்சியில் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் தனியார் காளவாசல் முதல் மாலப்பட்டி வரை வாய்க்கால் சீரமைப்பு மந்தையம்மன் கோவில் முதல் கருப்பத்தேவன்பட்டி, காமாட்சிதேவன் ஓடை வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு வாரம் நடந்தது.
இப்பணிக்கு வருவோரின் வருகையை பணித்தள பொறுப்பாளர்கள் பால்கண்ணன், கயல்விழி பதிவு செய்தனர். வேலை நடக்கும் நாட்களில் பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர். பதிவேற்றம் செய்த சில நிமிடங்களுக்குள் அச்செயலியில் முன்னாள் பணித்தள பொறுப்பா ளர்கள் அருள்முருகன், மேனகா செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் எனவும் மோசடியாக பதிவு செய்து பணிக்கு சம்மந்தமில்லாதவர்களின் புகைப்படத்தை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டனர்.
இது குறித்து பி.டி.ஓ. மலர்விழி புகாரின்படி சைபர்கிரைம் இன்ஸ்பெ க்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரை க்கண்ணன் ஆகி யோர் அருள்முருகன், மேனகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படு த்தினர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி யது.
நூற்றாண்டுகள் பழமை யான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்த ப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படு த்தினர்.
தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
- தொற்று நோய் பரவக்கூடிய கோழி மற்றும் ஆட்டுக்கழிவுகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர்.
கம்பம்:
கம்பம் மெட்டு சோதனைச்சாவடி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள மாநிலம் வண்டமேடு பகுதியைச் சேர்ந்த மணி (வயது 53). ராயப்பன்பட்டி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பரமன் (55). ஆகியோர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் தொற்று நோய் பரவக்கூடிய கோழி மற்றும் ஆட்டுக்கழிவுகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.
- சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பஸ் நிலையத்துக்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கிறனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ மூலம் பயணிகளை ஏற்றி இறக்கியும் வருகின்றனர். இந்நிலையில் பஸ்நிலை யத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்த னர்.
எனவே இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். எனவே சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது.
- தேன் வளர்ப்பு பெட்டிகள் தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சின்னனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மத்திய அரசின் கதர்கிராம தொழில்கள் ஆணையத்தின் சார்பில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை மண்டல கோட்ட இயக்குனர் அசோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தேனீக்கள் வளர்ப்பு மற்றும் அவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எவ்வாறு தயாரிப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்ப டுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச ங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தொழில் முனைவோர்களை உருவாக்கிடும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிகழ்ச்சியில் துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரை த்தனர்.
பின்னர் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மானியமாக தேனீ வளர்ப்பு பெட்டிகளை பெற்று வெற்றிகரமாக தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.
முன்னதாக இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்" என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க ப்பட்டன.
பின்னர் கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குனர் அசோகன் கூறுகையில்,
தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட தேன் வளர்ப்பு பெட்டிகள் இலவசமாக வழங்கியுள்ள தாகவும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நூற்றாண்டுகள் பழமையான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.






