என் மலர்tooltip icon

    தேனி

    • அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.
    • தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பலியானது தெரிய வந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது39). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் போடி மரிமூர் கண்மாய் அருகே உள்ள வாய்க்காலில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பகுதியில் உள்ள தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பாலாஜி பலியானது தெரிய வந்தது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் குரங்கணி போலீசார் விரைந்து வந்து பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தோட்ட உரிமையாளர் சடையன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது52). கூலித்தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலைக்குச் சென்றவர், உடல்நிலை சரியில்லாதவர் மற்றும் வீட்டில் இருந்தவர் உள்பட 5 பேர் மாயகினர்.

    தேனி:

    தேனி அருகே ஆண்டி பட்டி ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது26). இவர் மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். ஊர் திரும்பிய ராஜதுரை கடமலைக்குண்டு பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சங்கர மூர்த்திபட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (50). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று மாத்திரை வாங்க சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சு மியை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அசந்தா (33). இவர்களுக்கு சத்திய வர்ஷினி என்ற மகளும் கிஷோர்பாலா, கிரிதர்பாலா ஆகிய 2 மகன்களும் உள்ள னர். சம்பவத்தன்று பால முருகன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கிரிதர் பாலா மட்டும் வீட்டில் இருந்து ள்ளார். அசந்தா மற்றும் 2 குழந்தைகள் மாயமாகி இருந்தனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது.
    • மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார்.

    அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடியது. அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அரிசி கொம்பன் யானை அவரை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்ற காட்சி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

    • டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது.
    • கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார்.

    டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
    • மேகமலை வனத்துறையினர் அருவியல் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருசநாடு:

    கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. மேகமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் அருவியில் நீர்வரத்து மிக குறைந்து காணப்பட்டது.

    ஆனால் விடுமுறை நாட்கள் என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் மழை பெய்தது.

    அதன் காரணமாக மாலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேகமலை வனத்துறையினர் அருவியல் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வறண்டு விடும் நிலையில் காண ப்பட்ட அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் வர தொடங்கி உள்ளது.
    • கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இம்முறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று பெய்த சாரல் மழை காரணமாக உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி காணப்பட்டது.

    அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக தேனி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இம்முறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் வர தொடங்கி உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. அணைக்கு வருகின்ற 50 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இருப்பு 2303 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.76 அடியாக உள்ளது. அணைக்கு 56 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2375 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்தும் திறப்பு இல்லை. இருப்பு 207.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.40 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 47.44 மி.கன அடியாக உள்ளது.

    தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பெரியாறு 3.2, தேக்கடி 0.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 8.6, சண்முகாநதி அணை 11.6, வைகை அணை 20.6, ஆண்டிபட்டி 30.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
    • விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

    உத்தமபாளையம்:

    இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 11க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியதால் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பனை வனத்துறையினர் பிடித்து குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக் கொம்பன் மாவடி, வட்ட தொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளிரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ்.சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.

    நேற்று காலை கம்பம் நகருக்குள் வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரிய வரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் ஆக்ரோசத்துடன் சென்றது. யானை தாக்கி பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார். உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைபாசில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சுருளிப்பட்டி சாலையில் சென்றது. அங்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்தில் முகாமிட்டு பின்னர் சுருளி அருவி பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கண்காணித்த போது அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது.

    அரிசி கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்திட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொரு கும்கி யானையும் வர உள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

    யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர். இருந்தபோதும் சுருளி அருவி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.

    கம்பம்:

    கம்பம் நகருக்குள் இன்று காலை ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அரிசிக்கொம்பன் யானை பிடிபடும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரிசிக்கொம்பன் யானையை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.

    மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    • கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பாதுகாப்பான முறையில் கட்டப்படாமல் லேசான கடப்பாக்கல் வைத்து அதன் மேல் மண்ணை போட்டு மூடி அமைத்தனர்
    • அதிகாரி கள் பார்வையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார கழிப்பிட வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. உயரமான பகுதியில் கட்டப்பட்டதால் செப்டிக் டேங்க் கழிவு நீர் சாலையில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுகாதார கழிப்பிட வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் ஊராட்சி நிர்வாகம் தாழ்வான பகுதியில் புதிதாக செப்டிக் டேங்க் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பின்னர் கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பாதுகாப்பான முறையில் கட்டப்படாமல் லேசான கடப்பாக்கல் வைத்து அதன் மேல் மண்ணை போட்டு மூடி அமைத்தனர்.

    இதனால் 2 நாட்களில் செப்டிக் டேங்க் மேலே போடப்பட்ட கடப்பாக்கல் உடைந்தது. செப்டிக் டேங்க் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே அதிகாரி கள் பார்வையிட்டு நட வடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிக குளிரும், ஆப்பிரிக்க நாடுகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் இருப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை இலைகளை பயன்படுத்து கின்றனர்.
    • ஆப்பிரிக்க நாடுகளில் உணவுகழக அதிகாரிகள் சோதனைக்குபிறகும் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளதாக ஒப்புதல் பெற்று விவசாயிகள் முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தேனி:

    தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது, முருங்கையில் பல வகைகள் உள்ளன. தேனி மாவட்டம் வலையபட்டியில் முருங்கை 2900 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட சிறுவிவ சாயிகள் முருங்கை சாகு படியில் ஈடுபட்டுள்ளனர்.

    முருங்கை மண்டலத்தில் தேனி உள்ளதால் இங்கு அதிநவீன சாகுபடி உத்திகள் கையாளப்பட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த முருங்கை இலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுதவிர முருங்கைக்காய் 25 செ.மீ நீளமும், 170 கிராம் எடையிலும் இருக்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 1500 காய்கள் வரை காய்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் முருங்கை இலைகளுக்கு ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகவரவேற்பு உள்ளது.

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் அதிக குளிரும், ஆப்பிரிக்க நாடுகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் இருப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை இலைகளை பயன்படுத்து கின்றனர். ஐேராப்பிய யூனியன் உணவு கழகத்தின் ஒப்புதல் பெறப்பட்டும், ஆப்பிரிக்க நாடுகளில் உணவுகழக அதிகாரிகள் சோதனைக்குபிறகும் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளதாக ஒப்புதல் பெற்று விவசாயிகள் முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    வலையபட்டி முருங்கை இலைகள் ஆண்டுதோறும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தலா 200 டன், 10 டன் பவுடர், காஸ்மெட்டிக் இதர தேவைகளுக்காக 100 லிட்டர் ஆயில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் முருங்கை இலை, காய்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பலாப்பழம் உள்பட உணவுகளின் ருசி கண்டு திரும்ப திரும்ப குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • மின் நிலைய ஆஸ்பத்திரி அருகே யானைக் கூட்ம் முகாமிட்டுள்ளதால் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரு வித பீதியுடனே சென்று வரு கின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியாறு மின் நிலையம் உள்ளது. இதனையொட்டி மின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பளியங்குடி, வண்ணாத்தி ப்பாறை, மங்கலதேவி பீட், மாவடி, வட்டிதொட்டி உள்ளிட்ட பகுதிகள் பெரியாறு புலிகள் சரணாலயமாக உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக காட்டு யானைகள் உள்ளன. யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியில் கிடைக்காத பயிர்கள் விவசாய நிலங்களில் உள்ளதால் அங்கு புகுந்து சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் பலாப்பழம் உள்பட உணவுகளின் ருசி கண்டு திரும்ப திரும்ப குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பொது மக்கள் அச்சமடைந்து ள்ளனர்.

    தற்போது சுருளியாறு மின் நிலைய ஆஸ்பத்திரி அருகே யானைக் கூட்ம் முகாமிட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் மற்றும் குடு ம்பத்தினர் ஒரு வித பீதியுடனே சென்று வரு கின்றனர். ஏற்கனவே முணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் யானையை பிடித்து மங்கலதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் விட்டனர்.

    ஆனால் அந்த யானை மாவடி வனப்பகுதி வழியாக தமிழக எல்லைக்குள் புகுந்து மேகமலையில் தங்கியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அரிசி கொம்பன் யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்கு அரிசி கொம்பன் மீண்டும் திரும்பியுள்ளது. குமுளியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள சீனியர் ஓடை பகுதியில் அரிசி கொம்பன் நடமாட்டம் உள்ளது ஜி.பி.எஸ். காலர் மூலம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், அரிசி கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானை மீண்டும் மேகமலைக்கு செல்ல வாய்ப்பு இல்லை. எனினும் சுற்றுலா பயணி களுக்கான தடை இன்னும் விளக்கப்படவில்லை. கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    ×