என் மலர்
நீங்கள் தேடியது "சூறைக்காற்றுடன் பலத்த மழை"
- சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படு த்தினர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி யது.
நூற்றாண்டுகள் பழமை யான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்த ப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படு த்தினர்.
தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
- நேற்று மாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.
- இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோடை காலத்து வெப்பத்தை போல் உணரப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.
இதில் தருமபுரி மாவட்டம், மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், கொளகம்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, மெணசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, கடத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.






