என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unused health complex"

    • இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.
    • சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பஸ் நிலையத்துக்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கிறனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ மூலம் பயணிகளை ஏற்றி இறக்கியும் வருகின்றனர். இந்நிலையில் பஸ்நிலை யத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்த னர்.

    எனவே இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். எனவே சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×