தேனியில் வாலிபர் தற்கொலை

இவர் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வந்துள்ளார்.திடீரென வீட்டில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி அருகே கருவேல நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 23). இவர் போடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வந்துள்ளார். நேற்று திடீரென வீட்டில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தாய் ஒச்சம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com