என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதாரமின்றி காணப்படும் பொது கழிப்பறை.
சின்னமனூர் அருகே நோய் தொற்று பரப்பும் பொது கழிப்பறை
- இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது.
- தற்போது உள்ள கழிப்பறையை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும் குடிமகன்கள் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை கழிப்பறை அருகேயே உடைத்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் கால்களை பீங்கான்கள் பதம் பார்க்கின்றன. தினசரி 500க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் போதுமான கழிப்பறை வசதி இல்லாத தால் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் போதுமான கழிப்பறைகள் அமைக்க வேண்டும். தற்போது உள்ள கழிப்பறையை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






