என் மலர்
சிவகங்கை
காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிவகங்கை கலெக்டர் உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று காலையில் காரைக்குடி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு செல்வதற்காக புறப்பட்டார். சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் வழியாக காரைக்குடியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த காரை டிரைவர் செபஸ்தியான்(வயது 48) ஓட்டினார். காரின் முன்பகுதியில் கலெக்டரும், பின்இருக்கையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன்(38), தபேதார் ராஜசேகரன்(55), பாதுகாவலர் முகமது மீரா பாஜித்(38) இருந்தனர். அந்த கார் காளையார்கோவிலில் இருந்து கல்லல் செல்லும் வழியில் காளகண்மாய் என்ற இடம் அருகே சென்ற போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் செபஸ்தியான் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் பாதியாக முறிந்து காரின் மேல் பகுதியில் விழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இந்த விபத்தில் கார் சேதம் அடைந்தது. கலெக்டர் காருக்குள் சிக்கிக்கொண்டார். இந்த நிலையில் கலெக்டரின் பாதுகாவலர் முகமது மீரா பாஜித் கார் கதவை திறந்து வெளியே குதித்தார்.
பின்னர் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த கலெக்டரை பத்திரமாக வெளியே மீட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கலெக்டர், டிரைவர், தபேதார், பாதுகாவலர் ஆகிய 4 பேரும் லேசான காயத்துடன் தப்பினார்கள். கலெக்டருக்கு சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன் தோள்பட்டையில் படுகாயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கலெக்டர் உள்பட மற்ற 4 பேரும் மற்றொரு காரில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. பின்னர் 4 பேரும் வீடு திரும்பினார்கள். கலெக்டரின் உதவியாளர் மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 2-வது கட்ட கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 1500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தற்போது சராசரியாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
ஒரு தெருவில் அல்லது வீட்டில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியை தடை செய்யபட்ட பகுதியாக அறிவித்து மற்றவர்களுக்கும் நோய் பரவாத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 22 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 100-ல் இருந்து 120 காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் 2-வது கட்டமாக தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் வாயு போதுமான அளவு உள்ளது. தற்போது மருத்துவமனையில் 20 பேர் ஆக்சிஜனுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும், 45 ல் இருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் 6 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 5-ல்இருந்த 5.5 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது பொதுமக்களிடம் விழ்ப்பணர்வு ஏற்பட்டுள்ளதால் அவர்களாகவே வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
9 ஆயிரத்துக்கும் மேல் தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போடும் அளவில் இருப்பில் உள்ளது. இன்றோ அல்லது நாளையோ 12 ஆயிரம் தடுப்பூசிகள் வர உள்ளன.
பொதுவாக முதல் கட்ட கொரோனா தடுப்பலையில் மருத்துவ துறையில் பணியாற்றியவர்களுக்கு அதிகளவு கொரோனா தொற்று ஏற்பட்டது.அதனை தொடர்ந்து முதல் நிலை தடுப்பூசி போடும் தொடங்கிய காலத்தில் மருத்துவ துறையினருக்கும், காவல் துறையினருக்கும் என முதல்நிலை களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டது. இதனால் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா தொற்று அவர்களை பாதிக்கவில்லை. இதையே ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டு பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் தாக்காது என்பதை உணர்ந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 2006-ம் ஆண்டில் பணிபுரிந்தவர் நாடிமுத்து.
இவர் நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி என்ற பெண்ணுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாலாட்சி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஏற்பாட்டின் பேரில் ரசாயன பவுடர் தூவப்பட்ட ரூ.200-ஐ கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்துவிடம் கொடுக்கும் பொழுது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாடிமுத்து மீது சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் சந்திரன் குமாரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது ஆகியோர் சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி உதய வேலவன் குற்றம் சாட்டப்பட்ட நாடிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆக்சிஜன் இருக்கிறதா? என்று கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் வாயு உள்ளதா? என்று கேட்டறிந்தார். பின்னர். ஆக்சிஜன் வாயு உள்ள டேங்கை நேரில் பார்வையிட்டார். அத்துடன் தாய்சேய் நலப்பிரிவுக்கு சென்ற கலெக்டர் அங்கு சிகிச்சை பெற வந்திருந்த ஒரு பெண்ணிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்பு தடுப்பூசி போடும் பிரிவுக்கு சென்ற கலெக்டர் அங்கு 2-வது தடவை ஊசி போட வந்திருந்தவர்களிடம் தடுப்பூசி போட்டு கொண்டதால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.
கலெக்டர் ஆய்வின் போது அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்)இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் (சுகாதாரம்). யசோதாமணி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், உதவி கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மிதின்குமார், முகமது ரபிக், டாக்டர் சூரிய நாராயணன், ஆக்சிஜன் வழங்கல் கண்காணிப்பு மருத்துவர் வைரவ ராஜா, அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு மருத்துவர்கள் ஜான் சுகதேவ், வித்யா ஸ்ரீ மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமைப்படுத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 30).புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரைச் சேர்ந்தவர் பழனிவேல் (31) இருவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது காதலித்து 2013-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சீதாலட்சுமியின் கல்லூரி படிப்புக்கு கணவர் குடும்பத்தினர் தடை விதித்ததால் கணவன்-மனைவி இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் பழனிவேல் குடும்பத்தினர், சீதாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய தனது கணவர் பழனிவேல் தனது தந்தையுடன் வசித்து வந்து உள்ளார். அவரை பார்க்க சீதாலட்சுமியை அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து சீதாலட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, விசாரணை மேற்கொண்டு சீதாலட்சுமியின் கணவர் பழனிவேல், மாமனார் முத்தையா, மாமியார் ஜெயா மற்றும் பழனிவேலின் சகோதரிகள் 2 பேர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மானாமதுரையில் 19 வயது வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 5-ந்தேதி காலையில் அக்னிராஜ் (வயது 19) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22), உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மர் என்ற தர்மராஜ் (25), சக்திவேல் (24), சிவகங்கை மாடன்குளத்தைச் சேர்ந்த பொன்னையா (24), திருப்பாச்சேத்தியை அடுத்த தாலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்ற பூச்சி இருளப்பன் (23) ஆகிய 5 பேரை மானாமதுரை நகர் போலீசார் கைது செய்தனர்.
தற்போது இவர்கள் 5 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் மதுரை சிறையில் உள்ள 5 பேருக்கும் வழங்கப்பட்டது.
கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் செட்டிநாடு கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.
காரைக்குடி:
செட்டிநாடு என்றாலே முதலில் கட்டிட கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக செட்டிநாடு உணவு வகைகளும், செட்டிநாட்டு பகுதியில் தயாராகும் கைத்தறி சேலை ரகங்களும் தான்.
காரைக்குடி பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.
காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள செட்டிநாடு பகுதியில் அதிகளவில் கலைநயமிக்க அரண்மனை வீடுகள் உள்ளன.. இந்த வீடுகளை பார்த்து ரசிப்பதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் அவர்கள் இங்கு கைத்தறி மூலம் தயாராகும் செட்டி நாட்டு சுங்கடி சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகளை வாங்கி செல்வார்கள்.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை.
சுற்றுலா பயணிகள் வராததால் செட்டிநாடு பகுதியில் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கானாடுகாத்தான் பகுதியில் தறி கூடம் நடத்தி வரும் வெங்கட்ராமன் கூறியதாவது-
ஏற்கனவே கடந்தாண்டு நிலவிய கொரோனா தொற்று காரணமாக எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அந்த பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளோம். இந்நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இரவு நேர ஊரடங்கால் சரக்கு வாகனங்களில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செட்டிநாடு கைத்தறி சேலைகள் அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கீழடி அருகே கொந்தகையில் நடந்த அகழாய்வில் மனித மண்டை ஓடு, எலும்புகளுடன் முழு வடிவமாக முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. அதை மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனம்:
நாகரிகத்தில் தமிழர்கள் தான் முன்னோடி என உலகிற்கு பறை சாற்றிவரும் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கீழடியில் 3 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது. இதே போல் கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம் கிராமங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது.
இதில் கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தாழிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. முதலில் வாய்ப்பகுதி மூடிய நிலையில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழியின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணை அப்புறப்படுத்தி, அதன் பின்னர் அதில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்தப் பணியில் தொல்லியல் துறையினரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முதுமக்கள் தாழியிலிருந்த மனித மண்டை ஓடு, பெரிய எலும்புகள், மூட்டு எலும்புகள், கை-கால்களின் எலும்புகள் மற்றும் சிறிய எலும்புகள் எடுக்கப்பட்டு, தனித்தனியாக பைகளில் இட்டு வைத்தனர்.
இவை அனைத்தையும் மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதன் பின்னரே அந்த எலும்புகள் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவருடையது என்ற விவரம் தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். அந்த தாழியில் ஒருபழங்கால வாளும், 2 கூம்பு வடிவ மண்கிண்ணமும் இருந்தது. வாளும் கிடந்ததால் இறந்தவர் போர் வீரனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாழியை தொல்லியல் துறை மாநில துணை இயக்குனர் சிவானந்தமும் பார்வையிட்டார்.
நாகரிகத்தில் தமிழர்கள் தான் முன்னோடி என உலகிற்கு பறை சாற்றிவரும் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கீழடியில் 3 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது. இதே போல் கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம் கிராமங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது.
இதில் கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தாழிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. முதலில் வாய்ப்பகுதி மூடிய நிலையில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழியின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணை அப்புறப்படுத்தி, அதன் பின்னர் அதில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்தப் பணியில் தொல்லியல் துறையினரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முதுமக்கள் தாழியிலிருந்த மனித மண்டை ஓடு, பெரிய எலும்புகள், மூட்டு எலும்புகள், கை-கால்களின் எலும்புகள் மற்றும் சிறிய எலும்புகள் எடுக்கப்பட்டு, தனித்தனியாக பைகளில் இட்டு வைத்தனர்.
இவை அனைத்தையும் மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதன் பின்னரே அந்த எலும்புகள் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவருடையது என்ற விவரம் தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். அந்த தாழியில் ஒருபழங்கால வாளும், 2 கூம்பு வடிவ மண்கிண்ணமும் இருந்தது. வாளும் கிடந்ததால் இறந்தவர் போர் வீரனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாழியை தொல்லியல் துறை மாநில துணை இயக்குனர் சிவானந்தமும் பார்வையிட்டார்.
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச் .ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் தி.மு.க. தோற்றால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே வாக்கு பதிவு எந்திரம் பாதுகாப்பு குறித்து தேவை இல்லாமல் பேசுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வராது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகே உள்ள வீடுகளில் உள்ள டிஷ் ஆண்டனாவை கழட்ட கூறுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை விஞ்ஞான அறிவு எதுவும் இல்லை. வாக்கு பெட்டியில் ஹேக் செய்ய முடியும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை தி.மு.க. எப்படி பெற முடிந்தது.
வாக்கு மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில், நாளை தோற்றுப்போனால் கூறுவதற்காக இதுபோல் பேசி வருகின்றனர்.
தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளைப் பரப்பும் மன்சூர் அலிகானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச் .ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் தி.மு.க. தோற்றால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே வாக்கு பதிவு எந்திரம் பாதுகாப்பு குறித்து தேவை இல்லாமல் பேசுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வராது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
தேங்காய் நார் ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரியை கண்டால், பெண் காவலர்கள் பயன்படுத்தும் மொபைல் டாய்லட் கண்டெய்னரை கண்டால் இதிலிருந்து வாக்குப்பெட்டி எந்திரங்களை ஹேக் செய்து விடுவார்கள் என்றெல்லாம் பேசுவது அபாண்டம்.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகே உள்ள வீடுகளில் உள்ள டிஷ் ஆண்டனாவை கழட்ட கூறுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை விஞ்ஞான அறிவு எதுவும் இல்லை. வாக்கு பெட்டியில் ஹேக் செய்ய முடியும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை தி.மு.க. எப்படி பெற முடிந்தது.
வாக்கு மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில், நாளை தோற்றுப்போனால் கூறுவதற்காக இதுபோல் பேசி வருகின்றனர்.
தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளைப் பரப்பும் மன்சூர் அலிகானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் கடைகளில் கிருமிநாசினி தெளித்த பின்னரே மதுபிரியர்களுக்கு மது வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.
காரைக்குடி:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தவிர பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள் கூட்டமாக நிற்பதை தவிர்க்கும் வகையில் அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக கடை முன்பு வரிசையாக கட்டம் வரையப்பட்டது. அதில் வரிசையாக மதுப்பிரியர்கள் நின்று மதுபானங்கள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் மதுக்கடைக்கு வருபவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டனர். இதுதவிர மது வாங்க வந்தவர்களின் கைகளில் கிருமி நாசினி தெளித்த பின்னரே கடை அருகே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நடைமுறை சிவகங்கை மாவட்டத்தில் பின்பற்றப்பட்டது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு மதுபிரியர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டு முககவசம் அணிந்தவர்கள், கிருமிநாசினி ெதளித்தவருக்கு மட்டும் மதுவாங்க அனுமதி அளிக்கப்பட்டது.இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுரகங்களை கூடுதலாக வாங்கி சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.37½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் அதிகளவு பரவுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் நலன் கருதி நோய்த்தொற்று தடுப்பு தொடர்பாக ஒவ்வொருவரும் தற்பாதுகாப்பிற்காக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததற்காக வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களிடம் இருந்து பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என மேற்கண்ட துறைகள் ஒருங்கிணைந்து அபராதம் வசூலித்து உள்ளது.
கொரோனா வைரஸ் தொடங்கிய 2020-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அரசு விதிமுறை கடைபிடிக்காமல் சென்றதற்காக சுகாதாரத்துறையின் மூலம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரமும், காவல்துறையின் மூலம் ரூ.28 லட்சத்து 20ஆயிரமும், வருவாய்த்துறையின் மூலம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 200-ம், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.14 ஆயிரத்து 100-ம், பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.45 ஆயிரத்து 200-ம், நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 600-ம் சேர்த்து மொத்தம் ரூ.37 லட்சத்து 59 ஆயிரத்து 100 அபராத தொகையாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுதனிமை மற்றும் தனியார், அரசு மருத்துவமனைகளில் 445 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுதனிமை மற்றும் தனியார், அரசு மருத்துவமனைகளில் 445பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் பூரண குணமடைந்த 42 பேர் வீடு திரும்பினர்.






