search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    டாஸ்மாக் கடைகளில் கிருமிநாசினி தெளித்த பின்னரே மதுபிரியர்களுக்கு மதுவாங்க அனுமதி

    டாஸ்மாக் கடைகளில் கிருமிநாசினி தெளித்த பின்னரே மதுபிரியர்களுக்கு மது வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.
    காரைக்குடி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தவிர பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள் கூட்டமாக நிற்பதை தவிர்க்கும் வகையில் அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக கடை முன்பு வரிசையாக கட்டம் வரையப்பட்டது. அதில் வரிசையாக மதுப்பிரியர்கள் நின்று மதுபானங்கள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    மேலும் மதுக்கடைக்கு வருபவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டனர். இதுதவிர மது வாங்க வந்தவர்களின் கைகளில் கிருமி நாசினி தெளித்த பின்னரே கடை அருகே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நடைமுறை சிவகங்கை மாவட்டத்தில் பின்பற்றப்பட்டது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு மதுபிரியர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டு முககவசம் அணிந்தவர்கள், கிருமிநாசினி ெதளித்தவருக்கு மட்டும் மதுவாங்க அனுமதி அளிக்கப்பட்டது.இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுரகங்களை கூடுதலாக வாங்கி சென்றனர்.

    Next Story
    ×