என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புபடம்
இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்
By
மாலை மலர்24 April 2021 1:52 PM GMT (Updated: 24 April 2021 1:52 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 2-வது கட்ட கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 1500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தற்போது சராசரியாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
ஒரு தெருவில் அல்லது வீட்டில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியை தடை செய்யபட்ட பகுதியாக அறிவித்து மற்றவர்களுக்கும் நோய் பரவாத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 22 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 100-ல் இருந்து 120 காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் 2-வது கட்டமாக தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் வாயு போதுமான அளவு உள்ளது. தற்போது மருத்துவமனையில் 20 பேர் ஆக்சிஜனுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும், 45 ல் இருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் 6 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 5-ல்இருந்த 5.5 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது பொதுமக்களிடம் விழ்ப்பணர்வு ஏற்பட்டுள்ளதால் அவர்களாகவே வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
9 ஆயிரத்துக்கும் மேல் தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போடும் அளவில் இருப்பில் உள்ளது. இன்றோ அல்லது நாளையோ 12 ஆயிரம் தடுப்பூசிகள் வர உள்ளன.
பொதுவாக முதல் கட்ட கொரோனா தடுப்பலையில் மருத்துவ துறையில் பணியாற்றியவர்களுக்கு அதிகளவு கொரோனா தொற்று ஏற்பட்டது.அதனை தொடர்ந்து முதல் நிலை தடுப்பூசி போடும் தொடங்கிய காலத்தில் மருத்துவ துறையினருக்கும், காவல் துறையினருக்கும் என முதல்நிலை களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டது. இதனால் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா தொற்று அவர்களை பாதிக்கவில்லை. இதையே ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டு பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் தாக்காது என்பதை உணர்ந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
