என் மலர்
சேலம்
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது.
- இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. 264 மூட்டைகளில் 26.379 டன் மக்காசோளம், 56 மூட்டைகளில் 2.04 டன் தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்தது. ஒரு குவிண்டால் மக்காசோளம் அதிகபட்சம் ரூ.2245-க்கும் குறைந்தபட்சம் ரூ.2237-க்கும் விற்பனையானது. தேங்காய் கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சம் ரூ.87.77-க்கும், குறைந்தபட்சம் ரூ.58.75-க்கும் விற்பனையானது.
இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் கொப்பரை விலை உயர்ந்து வருவதால் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தரகர் இல்லாமல் விவசாயிகள் விற்பனை செய்து முழு தொகையினை பெறலாம். மேலும் ரூ. 3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் கடன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
- புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், ெபத்தநாயக்கன் பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, முத்தானூர், வைத்தியக்கவுண்டன் புதூர், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் மேற்கண்ட துணை மின் நிலையத்தின் கீழ் மின் வசதி பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
- கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூயம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் அரசு மணல் குவா ரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கருப்பண்ணன், மோகன், கோவிந்தராஜ், தேவி, செல்வ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது.
- உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்க கூடாது, மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
சேலம், நவ.2-
தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது . இதில் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 150 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் பேசியதாவது-
ரூ.5 லட்சம் அபராதம்
உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்க கூடாது, மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும், 6 மாத சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. தயாரிப்பு விற்பனை கூடம் புகை, தூசு, பிற அசுத்தங்கள் இன்றி சுகாதாரமாக அமைந்திருக்க வேண்டும், உணவு தயாரிப்பு பாத்திரங்கள், உபகரணங்கள் சிதிலம டையாமலும், சுத்த மாக கழுவி உலர்த்த வேண்டும், உணவு மூலப்பொருட்களை தரையில் பரப்பி வைக்க கூடாது,
பலகையின் மீது மூடி வைத்திருப்பது கட்டாயம், பொட்டல மிட்ட தரமான எண்ணை, நெய் பயன்ப டுத்துவதோடு அதனை திரும்ப திரும்ப பயன்படுத்த கூடாது, கிப்ட் பாக்ஸ் மீது லேபிள் விதிமுறையை பின்பற்ற வேண்டும், ஸ்டிக்கர், துண்டு சீட்டு ஒட்ட கூடாது, உணவு பொருட்களை கையாளும் அனைவரும் மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், அச்சிடப்பட்ட தாட்களை பயன்படுத்த கூடாது.
சட்ட நடவடிக்கை
குறிப்பாக ஒவ்வொரு இனிப்பு , காரம் மீதும் அதன் 14 விவரங்கள் அடங்கிய சீட்டு இடம்பெற வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தி குறைகள், தவறுகள் கண்டறிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
- சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம் பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரி
வழக்கம் போல கடந்த 31-ந் தேதி இளம்பிள்ளையில் சேலைகள் வாங்க சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலைய நடைமேடை எண் 1-ல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுறறி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரம்மம் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டு செல்போனையும் பறிமுதல் ெசய்தனர். இந்த செல்போனின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
இேத போல மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் ஷியாலி உமேஷ் மோர் (39), இவர் கடந்த 31-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் போடிநாயக்கனூ்ரில் இருந்து -சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு ரெயிலில் புறப்பட்டார். ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வரும் போது கண் விழித்து பார்த்த போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சம்பவம் குறித்து ேசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலைய 3-வது பிளாட்பார்மில் சுற்றி திரிந்த நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பாலாஜி நகரை சேர்ந்த யுவராஜ் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்பிலான அந்த செல்போனையும் மீட்டனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
- கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் திறக்கவில்லை.
கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.
- சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார்.
- தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மல்லமூப்பம் பட்டி அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள சிக்கன் கடை அருகே விக்னேஷ் நின்றிருந்தார். இதை பார்த்த மணி சிக்கன் வெட்டும் அரிவாளால் விக்னேஷை இடது காதுக்கு மேற்புறம் தலையில் வெட்டினார். இதில் நிலைகுலைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதி மக்கள் தேக்கம்பட்டியில் இருந்து கருப்பூர் வழியாக சேலம் வரும் சாலையில் திரண்ட னர். பின்னர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து 40-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சேலம் வந்த பஸ்சையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கருப்பூர் போலீசார், பஞ்சாயத்து செயலாளர், கவுன்சிலர்கள் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (45), இவர் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
- காரில் சேர்மன் ஆப் இந்தியாக எம்.எஸ்.எம்.இ. நேசனல் புரமோசன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (45), இவர் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60 )என்பவர் பழக்கமானார். அவர் சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் அனைத்து இந்திய தலைவர் எனக்கூறி வ்ந்தார். அவர் பயன்படுத்திய காரில் சேர்மன் ஆப் இந்தியாக எம்.எஸ்.எம்.இ. நேசனல் புரமோசன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரிடம் கோபால்சாமி பேசிய போது அந்த அமைப்பின் தமிழக கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறினார். அதற்கு 3.50 கோடி கேட்டார். கடந்த 10-ந் தேதி 50 லட்சம் ரூபாயுடன் சேலம், திருவாக்க வுண்டனூர் பைபாஸ் வர அறிவு றுத்தினார். அங்கு சென்ற கோபால் சாமி ரூ.31 லட்சம் ரூபாயை கொடுத்தார்.
அதனை வாங்கிய முத்துராமன் உடன் இருந்த பஞ்சாப் மாநிலத்ைத சேர்ந்த துஷ்யந்த் (34 )என்பவரிடம் கொடுத்தார். தொடர்ந்து முத்துராமன் வங்கி கணக்கில் 19 லட்சத்தை கோபால் சாமி அனுப்பினார். பணத்தை பெற்ற அவர் பதவியை பெற்று தரவில்லை.
இதனால் கோபால்சாமி கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது 9 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி 41 லட்சத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதற்கிைடயே சேலத்தில் உள்ள ஓரு ஓட்டலில் எம்.எஸ்.எம்.இ. ப்ரோமோசன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கூட்டம் நடந்தது. இதில் முத்துராமன், துஷ்யந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது முத்துராமன் 3-ம் வகுப்பு வரை படித்திருப்பதும், பொதுப்பணித்துறை காண்டிராக்டரான அவர் டெல்லி சென்ற போது துஷ்யந்துடன் பழக்கம் ஏற்பட்டதும் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த அமைப்பை தொடங்கி மதுரையில் ஏற்கனவே கூட்டத்தை நடத்தி உள்ள நிலையில், தற்போது சேலத்தில் 2-வது கூட்டத்தை நடத்தி கடன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது.
கைது
இதையடுத்து முத்துராமன் , துஷ்யந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது தேசிய கொடியை பயன்படுத்தியது, அரசு எம்பளத்தை பயன்படுத்தியது, கடன் வாங்கி தருவதாக ஏமாற்ற முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் பயன்படுத்திய தேசிய கொடி கட்டிய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கைதான முத்துராமன் மற்றம் துஷ்யந்த் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரம் இது போல வேறு யாரையும் ஏமாற்றினார்களா ? என்பது குறித்தும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
- சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.
சேலம்:
நடப்பாண்டில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.
நிரம்பி வழியும் கூட்டம்
இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்தி ரிகளில் காய்ச்சல் பாதித்தவர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சேலம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு வழக்கமாக வெளி நோயாளிகளாக 10 முதல் 20 பேர் காய்ச்சல் சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் தற்போது இது தினசரி 150 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி வெளி நோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்து நின்று நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
மேலும் உள்நோயா ளிகளாக காய்ச்சல் சிறப்பு வார்டில் 30 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதில் 2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 2 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களும் அடங்குவர், இதே போல புறநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 20-க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
கை, கால் , தலை வலி
தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகு பவர்களுக்கு கை, கால் வலி, தலை வலி, குளிர், இருமல், சோர்வு என பல்வேறு பாதிப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதித்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகி றார்கள். எனவே காய்ச்சலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என சுகாதாரத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
மேலும் வரும் நாட்களில் மழை அதிகம் பெய்யும் போது காய்ச்சல் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் குளிர்ந்த உணவுகளை தவிர்த்து சூடான உணவுகளை சாப்பிடு வதுடன், தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
- இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
- திருப்பூர் கொங்கு நாட்டுப்புற கலைக்குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என ஆட்டமாடி கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மதுவிற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சங்ககிரி:
சங்ககிரி தாலுகா அலுவல கம் முன்பு இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
சங்ககிரி கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். திருப்பூர் கொங்கு நாட்டுப்புற கலைக்குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என ஆட்டமாடி கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மதுவிற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சங்ககிரி மேற்கு வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரதீப், முனி யப்பன், மது விலக்கு போலீ சார், வனத்துறை அதி காரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது.
- வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் செயல்படுத்தி வரும் 'அன்னசுரபி' திட்டத்தின் கீழ் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர். தொடர்ந்து வாரம் இருமுறை பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அன்னசுரபி திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுமென அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், மோதிலால் ஆகியோர் தெரிவித்தனர்.






