என் மலர்tooltip icon

    சேலம்

    • அரசு துறையில் காலியாக உள்ள குரூப்- பி, குரூப்-சி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமிக்கிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதுகின்றனர்.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறையில் காலியாக உள்ள குரூப்- பி, குரூப்-சி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமிக்கிறது.

    சேலம் மாவட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதுகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலைத் தேர்வு- 2022 தாள்-1 தேர்வு நடத்தி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் காகாபாளையம், சிவதாபுரம் ஆகிய 2 தேர்வு மையங்களில் இந்த நடந்து வருகிறது. இந்த தேர்வில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

    இதன் தொடர்சியாக மீண்டும் அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,369 குரூப்-பி, மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதில் இடம் பெற்றுள்ளது. கல்வி தகுதி 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எனவே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-1, பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்திய அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும். வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரப்பில் தளர்வு அளிக்கப்படும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    • 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

    இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 179 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.

    இவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. வருகிற 28-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்படும்.

    அந்தவகையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகலில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது என்றும், அந்தந்த பள்ளிகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.

    • வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.ஜி.ஆர்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சத்தியக்குமாரி சரவணன், வசந்தி வெங்கசேன், சத்தியா சுரேஷ், பெரியம்மாள், ரஞ்சித்குமார், வெங்கடேஷ்வரன், லட்சுமி செல்வம், புவனேஸ்வரி மதியழகன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்து வரும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அடுத்த மாதம் 5-ந்தேதி யுடன் தேர்வு நிறைவடைகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி யுடன் தேர்வு நிறைவடைகிறது. சேலம் மாவட்டத்தில் 156 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகிறது.

    இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 7 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 16,706 மாணவர்கள், 19,437 மாணவிகள் என மொத்தம் 36,143 தேர்வர்கள் பிளஸ்-1 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர். கடந்த 14-ந்தேதி மொழித் தேர்வு, 16-ந்தேதி ஆங்கிலம் தேர்வு, 20-ந்தேதி அன்று இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

    நாளை மறுநாள் 10 பாடங்களுக்கு தேர்வு இதையடுத்து தொடர்ந்து 21-ந்தேதி முதல் நாளை (23-ந்தேதி) வரை என 3 நாட்கள் தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் உள்ளிட்ட 10 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

    • சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மீனா வெற்றி வேல் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆடல், பாடல்களுடன் கொண்டாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள் கலந்து கொண்டு வகுப்பறை செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.

    • கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
    • கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பலன் தரக்கூடிய நாட்டு மரக்கன்றுகளை கல்எக்டர் கார்மேகம் நட்டு வைத்தார்.

    சேலம்:

    ஏற்காடு அருகே கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி ஏற்காடு, கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பலன் தரக்கூடிய நாட்டு மரக்கன்றுகளை கல்எக்டர் கார்மேகம் நட்டு வைத்தார். மேலும், வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை கலெக்டர் வெளியிட்டார்.

    விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 2021-ம் வருட கணக்கீட்டின் படி மிக அடர்த்தியான காடுகள் 197.62 ச.கி.மீ, மித அடர்த்தி காடுகள் 757.20 ச.கி.மீ மற்றும் திறந்த வெளி காடுகள் 516.30 ச.கி.மீ ஆகியவற்றை உள்ளடக்கிய 1,471.12 சதுர கிலோ மீட்டர் அதாவது மாவட்ட நிலப்பரப்பில் 28.09 சதவீத வனப்பரப்பை கொண்டுள்ளது. இது 2019-ம் வருட கணக்கெடுப்பை விட 1.28 சதவீதம் அதிகமாகும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட வன நிலப்பரப்பை 33 சதவீதமாக அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    சேலம் மாவட்டத்தில், வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகள் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அதை முறையாக பராமரிக்கவும் வேண்டும். அனைத்து வகையான உபரி இடங்களிலும் மரக்கன்றுகள் நடுவது தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

    சேலம் மாவட்ட வனப் பகுதிகளில் யானை, காட்டு மாடு, புள்ளி மான், சருகு மான் உள்ளிட்ட பாலூட்டி இனங்களும், செந்தலை கிளி, நீல முக செண்பகம், சோலை பாடி, மாங்குயில், செம்மீசை சின்னான், ஊதா தேன் சிட்டு உள்ளிட்ட பறவையினங்களும், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளுக்கும், மலைப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்பு வகைகளும் பல்வேறு வகையான பூச்சிகளும் காணப்படுகின்றன.

    உலகில் வேறு எங்கும் காண முடியாத பாறை எலி, கவசம் வால் பாம்பு போன்ற ஓரிட வாழ் விலங்கினங்களும், வெர்னோனியா ஷெர்வரோயான்சிஸ் என்ற ஓரிட வாழ் தாவரமும் காணப்படுவது சேலம் மாவட்ட வனப் பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக உள்ளது. சேலம் மாவட்ட வனப் பகுதிகளுக்கு உள்ள அச்சுறுத்தல்களில் வனத் தீயே முதன்மையானதாக உள்ளது. மாவட்டத்தில் வனத் தீயினை கட்டுப்படுத்த பல துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, இ.வ.ப., வனவியல் விரிவாக்க அலுவலர் திரு.தி.கண்ணன், இணை இயக்குநர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்வகுமார், பாறை எலி ஆராய்ச்சியாளர் பிரவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது.
    • சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32), கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் கேட்டார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அவரது செல்போனுக்கு பேசிய நபர் சேலம் 5 ரோட்டில் இருந்து பேசுவதாகவும், இங்குள்ள பைனான்சில் 50 லட்சம் வரை கடன் பெற்று தருவதாகவும் கூறினார். மேலும் 50 லட்சம் கடனுக்கு 3 லட்சம் ரூபாய் பத்திரம் ஆவணங்கள் வழங்க வேண்டும், சேலம் கலெக்டர் அலுலலகத்தில் உள்ள கருவூலத்தில் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய கதிரேசன் 3 லட்சம் பணத்துடன் சேலம் கலெக்டர் அலுலவலகத்திற்கு வந்தார். பணத்தை வாங்கி கொண்டு கருவூலத்திற்கு சென்ற அந்த நபர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த கதிரேசன் இது குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் அங்குள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    சேலம்:

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தற்போது வரை மொத்தம் 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • சின்னப்பன் இவரது மனைவி ரெய்தாமணி (வயது 75). இவர் நேற்று இரவு திடீரென மாயமானார்.
    • அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் குண்டத்து கோவில் புது தெருவை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி ரெய்தாமணி (வயது 75). இவர் நேற்று இரவு திடீரென மாயமானார். இதை அடுத்து உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பள்ளப்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில நாட்களாக ரெய்தாமணி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பழைய மார்க்கெட் சாலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த ஆண்டு அமைக்கப்பட்டி ருந்த வேகத்தடை அப்புறப்படுத்தினார்கள்.
    • தற்போது சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவில்லை.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி பின்புறம் பழைய மார்க்கெட் சாலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த ஆண்டு அமைக்கப்பட்டி ருந்த வேகத்தடை அப்புறப்படுத்தினார்கள்.

    ஆனால் தற்போது சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் சேலம் மாநகராட்சி பின்புறம், சூசன் மஹால் செல்லும் வழியில் அனைத்து வாகனங்களும் மிக வேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு இதுவரையில் 2 பேர் இறந்துள்ளனர்.

    இதுகுறித்து சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் விபத்தினை தடுத்து நிறுத்த அப்பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டு மல்லிகை, முல்லை பூ, ஜாதி மல்லிகை, அரளி உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • கடந்த சில நாட்களாக கோவில் திருவிழா மற்றும் முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டு மல்லிகை, முல்லை பூ, ஜாதி மல்லிகை, அரளி உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சேலம் பழைய பஸ் நிலையத்தையொட்டி செயல்படும் பூ மார்க்கெட் மற்றும் சென்னை, பெங்களூருக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோவில் திருவிழா மற்றும் முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தை விட நடப்பு வாரத்தில் பூக்களின் விலை சரிந்துள்ளது.

    குண்டு மல்லிகை கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் முல்லை பூ கிேலா ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.500-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.320, கலர் காக்கட்டான்- ரூ.320, மலை காக்கட்டான் -ரூ.280, சம்பங்கி ரூ.80, சாதா சம்பங்கி ரூ.80, அரளி ரூ.50, வெள்ளை அரளி ரூ.50, மஞ்சள் அரளி ரூ.50, ஐ.செவ்வரளி ரூ.60, நந்தியாவட்டம் ரூ.40, சி.நந்தியாவட்டம் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
    • வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவி வருகிறது.

    இந்த வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலம், ஏற்காடு, மேட்டூர், அயோத்தியாப்–பட்டணம், காடையாம்பட்டி, எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை 2 மணி நேரம் விடாமல் ெபய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை தூறிக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் நிலவிய புழுக்கம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    இதனால் வீடுகளில் பொதுமக்கள் இரவு நிம்மதியாக தூங்கினர். இந்த திடீர் மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×