என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீலியம்பட்டி பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
சீலியம்பட்டி அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்
- சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெற்றது.
- வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மீனா வெற்றி வேல் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆடல், பாடல்களுடன் கொண்டாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள் கலந்து கொண்டு வகுப்பறை செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.
Next Story






