என் மலர்
நீங்கள் தேடியது "increasing accidents"
- பழைய மார்க்கெட் சாலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த ஆண்டு அமைக்கப்பட்டி ருந்த வேகத்தடை அப்புறப்படுத்தினார்கள்.
- தற்போது சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவில்லை.
சேலம்:
சேலம் மாநகராட்சி பின்புறம் பழைய மார்க்கெட் சாலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த ஆண்டு அமைக்கப்பட்டி ருந்த வேகத்தடை அப்புறப்படுத்தினார்கள்.
ஆனால் தற்போது சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் சேலம் மாநகராட்சி பின்புறம், சூசன் மஹால் செல்லும் வழியில் அனைத்து வாகனங்களும் மிக வேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு இதுவரையில் 2 பேர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் விபத்தினை தடுத்து நிறுத்த அப்பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






