என் மலர்
சேலம்
- சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார்.
- இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் சிவதாபுரம் அடுத்த சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர். அவர் சிவதாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பதும், வெள்ளி தொழிலாளியான இவர், குருவி சுடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சேலத்தாம்பட்டி ஏரியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அதே சமயம் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கான உரிமம் எதுவும் அவரிடம் இல்லை. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்/ ரமேஷ் இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்/ ரமேஷ் இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் அழைத்து விசாரிக்க முயன்ற போது, அந்த வாலிபர் பையை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த பையை காவல் நிலையம் எடுத்துச் சென்று சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த கஞ்சா பையை போட்டுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- சுக்கம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலிதேவி (வயது 37). இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
- சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருந்த வாலிபர் ஒருவர் அஞ்சலி தேவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலிதேவி (வயது 37). இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இன்று காலை சேலம் டவுன் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு காலை பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 11.30 மணி அளவில் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருந்த வாலிபர் ஒருவர் அஞ்சலி தேவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சலி தேவியை குத்தினார். இதில் மார்பு பகுதிக்கு அருகில் கத்திகுத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன அஞ்சலிதேவி மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அஞ்சலி தேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சலி தேவியை கத்தியால் குத்திய வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் குத்திய வாலிபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அஞ்சலிதேவி கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கு ரூ.2 லட்சம் பணம், 2 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தையும், நகையையும் சதீஷ் திருப்பி தராததால், அஞ்சலிதேவி சதீஷை வரவழைத்து பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து விழுந்தது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பணம் கொடுத்ததது குறித்து அஞ்சலிதேவி ஏற்கனவே வீராணம் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பழைய பஸ் நிலையத்தில், சீருடையில் இருந்த ஊர்க்காவல் படை பெண்ணை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார்.
- கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
ஆத்தூர் நரசிங்கபுரம் திட்டா நகரில் வசித்து வந்தவர் மணி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி (36). இவர்களுக்கு கோகுல்நாத் (20) என்ற மகனும், நிஷா (18) என்ற மகளும் உள்ளனர். கோகுல்நாத் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். மணியின் மனைவி காந்திமதிக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்.
பின்னர் அவராக வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 17-ந் தேதி காந்திமதி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மணி தனது மகனிடம் அம்மாவை தேடி பார்த்து வருகிறேன் என கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில் திட்டாநகர் பகுதியில் உள்ள ெரயில்வே கேட் அருகே மணி ெரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார். இது குறித்து நேற்று காலை தண்டவாள பாதையில் வேலை பார்த்து வந்த ஊழியர் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மணி, ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ெரயிலில் அடிபட்டு இறந்து விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் மணி சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
- தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பாலம் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்தார்.
- பஸ் நின்றவுடன் அதில் குடிபோதையில் வாலிபர் ஏறினார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து ஓமலூருக்கு கடந்த 19-ந்தேதி மாலை அரசு பஸ் புறப்பட்டது. தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பாலம் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்தார். பஸ் நின்றவுடன் அதில் குடிபோதையில் வாலிபர் ஏறினார்.
அவர் பஸ்சில் இருந்த பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கண்டக்டர் செம்மலை (வயது 54) அந்த போதை வாலிபரை வழியில் இறக்கி விட்டார். அப்போது அவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.
இது பற்றி தீவட்டிப்பட்டி போலீசில் கண்டக்டர் செம்மலை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் பஸ்சில் குடிபோதையில் ஏறி தகராறில் ஈடுபட்டு கண்டக்டரை தாக்கியது, பூசாரிப்பட்டி அருகே உள்ள கோணம்பட்டியை சேர்ந்த செங்கோடன் மகன் ராஜ குபேந்திரன் (35) என ெதரியவந்தது.
அவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ராஜ குபேந்திரன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராஜ குபேந்திரனை ெஜயிலில் அடைத்தனர். அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய நபரை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் பாராட்டினார்.
- கைப்பந்து கழகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கோண்டு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
சேலம்:
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துனைத்தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கோண்டு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
- ஆவின் பாலகம் எதிரில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த மாதம் 3-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார்.
- இறந்த முதியவர் உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை வளாகம் ஆவின் பாலகம் எதிரில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த மாதம் 3-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார். அன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் தூய்மை பணியாளர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பிரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இறந்த முதியவர் உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த இந்த முதியவர் பெயர்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரது உறவினர்கள் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை.
இது குறித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீல நிற கரை போட்ட வெள்ளை வேட்டி, சந்தன நிர அரைக்கை சட்டை அணிந்திருந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஆவின் பால் ஏஜெண்ட் . நேற்று இவர் கடையில் வசூலான ரூ.15,100 பணத்தை எடுத்துக் கொண்டு தாதகாப்பட்டியில் பஸ் ஏறி, ஜவுளிக்கடை ஸ்டாப்பில் உள்ள தனியார் வங்கியில் செலுத்த வந்தார்.
- அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் விஜயா (வயது 50). ஆவின் பால் ஏஜெண்ட் . நேற்று இவர் கடையில் வசூலான ரூ.15,100 பணத்தை எடுத்துக் கொண்டு தாதகாப்பட்டியில் பஸ் ஏறி, ஜவுளிக்கடை ஸ்டாப்பில் உள்ள தனியார் வங்கியில் செலுத்த வந்தார். தொடர்ந்து வங்கியின் உள்ளே சென்று பணத்தை கணக்கில் கட்டி விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் நகை கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது கூட்ட நெரிசலில் யாரோ மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து விஜயா அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிகண்டன் (வயது 27). லாரி டிரைவர். இவர் நேற்று காலை நெத்திமேடு கேபி கரடு அடிவாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அங்கு வந்த ஒரு நபர் மணிகண்டனை திடீரென வழிமறித்து , கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் சன்னியாசிகுண்டு எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). லாரி டிரைவர். இவர் நேற்று காலை நெத்திமேடு கேபி கரடு அடிவாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு நபர் மணிகண்டனை திடீரென வழிமறித்து , கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து ரூ.650 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர் அன்னதானப்பட்டி அவ்வையார் தெரு பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற வளத்தி குமார் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.
ரவுடி பட்டியலில் உள்ள வளத்தி குமார் மீது கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அரிசி கடத்தல், ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குண்டர் சட்டத்திலும் 4 முறை கைது செய்யப்பட்டார்.
- பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 23). இவர் அதேபகுதியில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 23). இவர் அதேபகுதியில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.10,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து துளசிராமன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சேலம் குகை புலிக்குத்தி 4-வது தெருவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையை சமியுல்லா மனைவி ஜமீனா (வயது 37) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற இவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.13,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வெறுங்கையுடன்
இதேபோல், இந்த கடைக்கு அருகில் இருந்த சக்திவேல் (31) என்பவருக்கு சொந்தமான பிரவுசிங் சென்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்காததால், கொள்ளையர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.
வழக்கு பதிவு
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- தமிழ் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி, ஏற்காடு ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி, ஏற்காடு தமிழ் சங்க நிறுவனர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கலை வாணி முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஆர்.சி. சர்ச் மண்டபத்தில் ஏற்காடு தமிழ் சங்கம் தலைவர் ரவி தலைமையில் தமிழ் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து சங்கத்தை வாழ்த்து பேசினார்.
விழாவில் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி, ஏற்காடு ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி, ஏற்காடு தமிழ் சங்க நிறுவனர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கலை வாணி முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் ஏற்காடு முழுவதும் உள்ள 37 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஏற்காடு தமிழ் சங்கம் மூலம் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டுப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது.
சங்க பொருளாளர் ரகுராஜ் வரவேற்றார். இறுதியில் சங்கத்தின் செயலாளர் சசி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் காமராஜ், ரகு, மதன், சசிக்குமார், தவசி, நவீன்குமார், சிலம்பரசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வாழப்பாடி அடுத்த தும்பல் வனச்சரகத்தின் சார்பில், புழுதிக்குட்டை ஊராட்சி கீரைப்பட்டி மலை கிராமத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவிற்கு, தும்பல் வனச்சரகர் விமல் குமார் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த தும்பல் வனச்சரகத்தின் சார்பில், புழுதிக்குட்டை ஊராட்சி கீரைப்பட்டி மலை கிராமத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தும்பல் வனச்சரகர் விமல் குமார் தலைமை வகித்தார். வனத்தால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம், காடு வளர்ப்பு மற்றும் காட்டுத் தீ பரவல் தடுப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து, வனவர்கள் ஸ்ரீகணேஷ், ராஜேஸ்கண்ணா மற்றும் வனக்காவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனத்தையும், வன விலங்குகளை பாதுகாப்பதென வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






