என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Who is the dead old man? இறந்த முதியவர் யார்?"

    • ஆவின் பாலகம் எதிரில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த மாதம் 3-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார்.
    • இறந்த முதியவர் உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவமனை வளாகம் ஆவின் பாலகம் எதிரில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த மாதம் 3-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார். அன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் தூய்மை பணியாளர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பிரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இறந்த முதியவர் உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த இந்த முதியவர் பெயர்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரது உறவினர்கள் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீல நிற கரை போட்ட வெள்ளை வேட்டி, சந்தன நிர அரைக்கை சட்டை அணிந்திருந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×