என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகில் அரசு டாஸ்மாக் கடை (எண்.7124) செயல்பட்டு வருகிறது.
    • போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்து கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகில் அரசு டாஸ்மாக் கடை (எண்.7124) செயல்பட்டு வருகிறது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே அந்த கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் 12 மணிக்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தையொட்டி டாஸ்மாக் கடையின் முன்பாக பாதுகாப்புக்காக சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், ஆனந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இரண்டடுக்கு பாதுகாப்பு போட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்து கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒருவரை இறந்த பிணம் போல் வேடமிட்டு மாலை அணிந்து வந்து நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் கடைக்குள் நுழைய முற்பட்ட தால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளுவின்போது போலீஸ்காரர் ஒருவர் கீேழ விழுந்து காயம் அடைந்தார். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவியது.

    மேலும் போராட்டக்கா ரர்கள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள்.

    குண்டுகட்டாக தூக்கி

    சென்று கைது செய்ய முற்பட்டபோது, சிலர்

    சாலையில் படுத்துக் கொண்டு வாகனத்தில் ஏற மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் கடையின் முன்பாக திரண்டு இருந்த பொதுமக்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், குடி மகன்கள் மது குடித்து விட்டு அங்கு கூட்டம் கூட்டமாக நிற்பதால் பெண்கள், பள்ளி மாணவிகள் இவ்வழியாக செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். சில குடிமகன்கள் கேலி கிண்டல் செய்கின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இல்லையென்றால் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • சரவணபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்க்க வெளியே சென்றார்.
    • காலை வீடு திரும்பியபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சர வணபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்க்க வெளியே சென்றார்.

    இன்று காலை வீடு திரும்பியபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.22,000 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஜோதிமணி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மற்றொரு திருட்டு

    இதே போல் அழகாபுரம் நகரமலை அடிவாரம் சரவணா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (52). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இன்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. காவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 11 பவுன் தங்க மோதிரம், ரூ.5500 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்டது.
    • தக்காளி வரத்து அதிகம் ஆனதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை ஆனது.

    சேலம்:

    சேலத்தில் உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்டது. நேற்று சேலத்திற்கு பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வாழப்பாடி, காரிப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பலர் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதை வியாபாரி கள் பெற்று விற்பனை செய்தனர். வழக்கத்தை விட நேற்று தக்காளி வரத்து அதிகம் ஆனதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை ஆனது.

    • 15 வயது மகன் இன்று காலை 6 மணியளவில் திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்குக்காட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிவந்தீஸ்வரன் வீட்டில் தஞ்சம் அடைந்தான்.

    வாழப்பாடி:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதிடர் அம்சகுமார் - விஜயலட்சுமி தம்பதியினரின் 15 வயது மகன் இன்று காலை 6 மணியளவில் திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.

    மாற்றுத்திறனாளியான இவன் மீண்டும் வீடு திரும்ப வழி தெரியாததால், சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்குக்காட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிவந்தீஸ்வரன் வீட்டில் தஞ்சம் அடைந்தான்.

    சிறுவனிடம் அன்புகாட்டி உபசரித்த சிவந்தீஸ்வரன் குடும்பத்தினர், சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பல்வேறு குழுக்களில் பகிர்ந்தனர். மேலும் சிறுவனை வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் மகனை தேடி அலைந்த பெற்றோர், வாட்ஸ் அப் வாயிலாக தகவலறிந்து, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து சிறுவன் போலீசார் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, மீட்டுக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினர், போலீசா ருக்கு சச்சினின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். 

    • அஞ்சலி தேவி (வயது 37). இவர் சேலம் மாநகர போலீசில் ஊர்க்காவல் படையில் பணி புரிகிறார்.
    • அஞ்சலிதேவியிடம், நான் ரேசன் கடையில் வேலை பார்க்கிறேன், பணம் தந்தால் அந்த கடையில் வேலை வாங்கி தருகிறேன் என்று சதீஷ் கூறினார்.

    ேசலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 37). இவர் சேலம் மாநகர போலீசில் ஊர்க்காவல் படையில் பணி புரிகிறார்.

    இவருக்கும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (38) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது அஞ்சலிதேவியிடம், நான் ரேசன் கடையில் வேலை பார்க்கிறேன், பணம் தந்தால் அந்த கடையில் வேலை வாங்கி தருகிறேன் என்று சதீஷ் கூறினார். அதனை நம்பிய அஞ்சலி தேவி 2 லட்சம் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகையை கொடுத்தார்.

    சதீஷ் வேலை வாஙகி கொடுக்காமல் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தார். இதனால் அவர்களுக்கிடயே தகராறு ஏறுபட்டு வந்தது. மேலும் அவர் ரேசன் கடையில வேலை பார்க்காமல் கட்ட பஞ்சாயத்து செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனால் அஞ்சலி தேவி அவரிடம் பேசுவதை நிறுத்தினார். இது சதீசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஷ் அஞ்சலிதேவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார்.

    நேற்று அஞ்சலி தேவி போலீஸ் நிலையத்தில் இருந்த போது அங்கு சென்று சதீஷ் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் வீட்டிற்கு செல்ல அஞ்சலிதேவி சேலம் பழைய பஸ் நிலையத்தில் சென்று கொணண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் முதுகில் கத்தியால் குத்தினார். இதனால் அலறி துடித்த அவரை போது மக்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது தொடர்பாக விசா ரணை நடத்திய கிச்சிப்பா ளையம் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே போலீஸ் நிலையத்துக்கே சென்று சதீஷ் அஞ்சலிதேவியிடம் தகராறு செய்தபோது அங்கு பணீயில் இருந்த போலீசார் அவர்களை தடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவ காரம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பனஞ்சாரி, சேவிவட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்துள்ளனர்.
    • பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சென்று துட்டம்பட்டி யில் இருந்து மாட்டை யாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம். துட்டம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு பனஞ்சாரி, சேவிவட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்துள்ளனர். இத னால் அப்பகுதி பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சென்று துட்டம்பட்டி யில் இருந்து மாட்டை யாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் துட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிதுரைசாமி, ஒன்றி யக்குழு துணைத்த லைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துரையன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அனைத்து வீடுளுக்கும் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிந்து அனைவருக்கும் குடிநீர் முறையாக வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர்.
    • இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.

    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி யில் சேர்ந்தார்.

    சுபாசும் காதலை தொடர்வதற்காக அங்கு வந்து தங்கி உள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்தார். இதனால் மாணவி கடந்த 2008-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் ஆட்டை யாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீ சார் சுபாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசா ரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறை வானார். இதையடுத்து கடந்து 2013-ம் ஆண்டு சேலம் கோர்ட்டு சுபாஷிற்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    பின்னர் தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த சுபாசை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    • வெள்ளையன் குடும்பத்தாருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • இது தொடர்பாக சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பள்ளிகொண்டான்பாறை, வீதன்வளவு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் குடும்பத்தாருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இது தொடர்பாக சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதல் தொடர்பாக பழனி கொடுத்த புகாரின் படி வெள்ளையன், கலா, காளியப்பன், குமரன் ஆகியோர் மீதும், வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் சுப்ரமணி,பழனி, சக்திவேல் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
    • விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.

    அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.

    இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,410 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1,711 கன அடியாக அதிகரித்தது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரித்தது.

    இதனால் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து 1,500 கன அடியாக நீடித்த நிலையில் நேற்று விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்தது.

    அதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,410 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1,711 கன அடியாக அதிகரித்தது. நேற்று மதியத்திற்கு பிறகு மழை பெய்யவில்லை.

    இதனால் இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 1,260 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் 103.20 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 103.19 அடியாக சரிந்தது. தொடர்ந்து மேலும் இன்று காலையில் நீர்மட்டம் 103.15 அடியாக குறைந்தது.

    • நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 43). வெள்ளி வியாபாரி.
    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    சேலம்:

    சேலம் குகை நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 43). வெள்ளி வியாபாரி. இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த அங்குராஜ் கடந்த 18-ந்தேதி காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு இதுவரையிலும் வீடு திரும்பவில்லை.

    உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது மனைவி நிர்மலாதேவி செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான அங்குராஜை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். அவர் மாயமான அன்று சந்தன கலர் சட்டை, கட்டம் போட்ட நீல நிற லுங்கி அணிந்திருந்தார். நடுவயிற்றில் ஆபரேசன் செய்த 10 இன்ச் காயத்தழும்பு உள்ளது. இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் 3 பேரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). இவர் பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த ஜனவரி 25-ந் தேதி இவரது பட்டறைக்கு தலையில் ஹெல்மெட் மற்றும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் பாஸ்கர் மற்றும் அவருடன் இருந்த செவ்வாபேட்டை நரசிம்மன்செட்டி தெருவை சேர்ந்த சிவகுமார் (44), கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி (18) ஆகிய 3 பேரையும் மூவரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று காலை பாஸ்கர் உள்ளிட்டோரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து பரத் (23), இதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×