என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.15 அடியாக சரிந்தது
- மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,410 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1,711 கன அடியாக அதிகரித்தது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து 1,500 கன அடியாக நீடித்த நிலையில் நேற்று விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்தது.
அதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,410 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1,711 கன அடியாக அதிகரித்தது. நேற்று மதியத்திற்கு பிறகு மழை பெய்யவில்லை.
இதனால் இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 1,260 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் 103.20 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 103.19 அடியாக சரிந்தது. தொடர்ந்து மேலும் இன்று காலையில் நீர்மட்டம் 103.15 அடியாக குறைந்தது.






