என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்குராஜ்
வெள்ளி வியாபாரி மாயம்
- நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 43). வெள்ளி வியாபாரி.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
சேலம்:
சேலம் குகை நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 43). வெள்ளி வியாபாரி. இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த அங்குராஜ் கடந்த 18-ந்தேதி காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு இதுவரையிலும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது மனைவி நிர்மலாதேவி செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான அங்குராஜை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். அவர் மாயமான அன்று சந்தன கலர் சட்டை, கட்டம் போட்ட நீல நிற லுங்கி அணிந்திருந்தார். நடுவயிற்றில் ஆபரேசன் செய்த 10 இன்ச் காயத்தழும்பு உள்ளது. இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






