என் மலர்
நீங்கள் தேடியது "stab the girl பெண்ணுக்கு கத்திக் குத்து"
- அஞ்சலி தேவி (வயது 37). இவர் சேலம் மாநகர போலீசில் ஊர்க்காவல் படையில் பணி புரிகிறார்.
- அஞ்சலிதேவியிடம், நான் ரேசன் கடையில் வேலை பார்க்கிறேன், பணம் தந்தால் அந்த கடையில் வேலை வாங்கி தருகிறேன் என்று சதீஷ் கூறினார்.
ேசலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 37). இவர் சேலம் மாநகர போலீசில் ஊர்க்காவல் படையில் பணி புரிகிறார்.
இவருக்கும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (38) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது அஞ்சலிதேவியிடம், நான் ரேசன் கடையில் வேலை பார்க்கிறேன், பணம் தந்தால் அந்த கடையில் வேலை வாங்கி தருகிறேன் என்று சதீஷ் கூறினார். அதனை நம்பிய அஞ்சலி தேவி 2 லட்சம் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகையை கொடுத்தார்.
சதீஷ் வேலை வாஙகி கொடுக்காமல் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தார். இதனால் அவர்களுக்கிடயே தகராறு ஏறுபட்டு வந்தது. மேலும் அவர் ரேசன் கடையில வேலை பார்க்காமல் கட்ட பஞ்சாயத்து செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனால் அஞ்சலி தேவி அவரிடம் பேசுவதை நிறுத்தினார். இது சதீசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஷ் அஞ்சலிதேவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார்.
நேற்று அஞ்சலி தேவி போலீஸ் நிலையத்தில் இருந்த போது அங்கு சென்று சதீஷ் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் வீட்டிற்கு செல்ல அஞ்சலிதேவி சேலம் பழைய பஸ் நிலையத்தில் சென்று கொணண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் முதுகில் கத்தியால் குத்தினார். இதனால் அலறி துடித்த அவரை போது மக்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது தொடர்பாக விசா ரணை நடத்திய கிச்சிப்பா ளையம் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே போலீஸ் நிலையத்துக்கே சென்று சதீஷ் அஞ்சலிதேவியிடம் தகராறு செய்தபோது அங்கு பணீயில் இருந்த போலீசார் அவர்களை தடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவ காரம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.






