என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrested in rowdy robbery case ரவுடி வழிப்பறி வழக்கில் கைது"

    • மணிகண்டன் (வயது 27). லாரி டிரைவர். இவர் நேற்று காலை நெத்திமேடு கேபி கரடு அடிவாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அங்கு வந்த ஒரு நபர் மணிகண்டனை திடீரென வழிமறித்து , கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சன்னியாசிகுண்டு எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). லாரி டிரைவர். இவர் நேற்று காலை நெத்திமேடு கேபி கரடு அடிவாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு நபர் மணிகண்டனை திடீரென வழிமறித்து , கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து ரூ.650 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர் அன்னதானப்பட்டி அவ்வையார் தெரு பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற வளத்தி குமார் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.

    ரவுடி பட்டியலில் உள்ள வளத்தி குமார் மீது கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அரிசி கடத்தல், ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குண்டர் சட்டத்திலும் 4 முறை கைது செய்யப்பட்டார். 

    ×