என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா"
- தமிழ் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி, ஏற்காடு ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி, ஏற்காடு தமிழ் சங்க நிறுவனர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கலை வாணி முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஆர்.சி. சர்ச் மண்டபத்தில் ஏற்காடு தமிழ் சங்கம் தலைவர் ரவி தலைமையில் தமிழ் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து சங்கத்தை வாழ்த்து பேசினார்.
விழாவில் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி, ஏற்காடு ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி, ஏற்காடு தமிழ் சங்க நிறுவனர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கலை வாணி முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் ஏற்காடு முழுவதும் உள்ள 37 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஏற்காடு தமிழ் சங்கம் மூலம் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டுப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது.
சங்க பொருளாளர் ரகுராஜ் வரவேற்றார். இறுதியில் சங்கத்தின் செயலாளர் சசி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் காமராஜ், ரகு, மதன், சசிக்குமார், தவசி, நவீன்குமார், சிலம்பரசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






