என் மலர்
நீங்கள் தேடியது "‘Hall ticket’"
- 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- இந்த பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 179 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
இவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. வருகிற 28-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்படும்.
அந்தவகையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகலில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது என்றும், அந்தந்த பள்ளிகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.






