என் மலர்
நீங்கள் தேடியது "The old woman who floated like a corpse"
- சின்னப்பன் இவரது மனைவி ரெய்தாமணி (வயது 75). இவர் நேற்று இரவு திடீரென மாயமானார்.
- அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார்.
சேலம்:
சேலம் மெய்யனூர் குண்டத்து கோவில் புது தெருவை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி ரெய்தாமணி (வயது 75). இவர் நேற்று இரவு திடீரென மாயமானார். இதை அடுத்து உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பள்ளப்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில நாட்களாக ரெய்தாமணி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






