என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா
- 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சேலம்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தற்போது வரை மொத்தம் 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story






