என் மலர்
சேலம்
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.42 அடியாக இருந்ததால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.
- அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது. அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 583 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 ஆயிரத்து 266 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 54.42அடியாகவும், அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 20.70 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 14.70 டி.எம்.சி. தண்ணீரே பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.42 அடியாக இருந்ததால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது. சில இடங்களில் வறண்டும், நிலப்பகுதி பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணையின் நீர் மட்டம் 74.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 102.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2461 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 6038 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளிலிருந்தும் 8038 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- கடந்த 23-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக இருந்தது.
சேலம்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படு கின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிஇ கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது .
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசா வில்) : சென்னை 510, பர்வாலா 461, பெங்களூர் 480, டெல்லி 475, ஐதராபாத் 435, மும்பை 500, மைசூர் 482, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 545.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.110 ஆக பிசிசி அறி வித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.
- சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஓணம் பண்டிகை
அன்னதானப்பட்டி,
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்கு றிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்று வரலட்சுமி விரதம், வருகிற 29- ந் தேதி செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.260, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.40, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.120, வெள்ளை அரளி - ரூ.240, மஞ்சள் அரளி - ரூ.240, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.140, நந்தியா வட்டம் - ரூ.20 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
- தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி ஆலையை நிறுவ நடவடிக்கை
சேலம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே முடக்குபட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் கழுத்தில் மனுவை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நூதன முறையில் புகார் அளிக்க வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மலை குன்றுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் என இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் எங்கள் பகுதியில் தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி ஆலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது ஆலையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூச்சிக்கொல்லி ஆலை இப்பகுதியில் வந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் குடிநீர் மாசு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை போலீஸ் நிலையத்திலும், ஊராட்சி மன்றத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி ஆலையை திறக்க அனும திக்காமல் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
- பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பேர் சிற்றுண்டி, மற்றும் தேனீர் அருந்துவது வழக்கம்.
- உணவகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் தினசரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பேர் சிற்றுண்டி, மற்றும் தேனீர் அருந்துவது வழக்கம். இந்த நிலையில் இன்று உணவகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த நபர் ஒருவர் உள்ளே புகுந்த பாம்பை உணவகத்தை விட்டு வெளியே துரத்தினார்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சர்க்கரை பொங்கல், கிச்சடி, காய்கறி பிரியாணி ஆகிய உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
- 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்ப யன்பெறுகின்றனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் முதல்-அமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சர்க்கரை பொங்கல், கிச்சடி, காய்கறி பிரியாணி ஆகிய உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி ஆகியோர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
1,418 பள்ளிகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உன்னத நோக்குடன் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தினை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும்
விரிவுபடுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்ப யன்பெறுகின்றனர். தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். எவ்வழி யில் கல்வி பயின்று வரு கிறோம் என்பது ஒரு தடை
யாக இருக்காது. இதற்கு எடுத்துக்காட்டாக சந்தி ரயான் 3 திட்ட இயக்குனர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இத்திட்டத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளிக் குழந்தைகள் ஊட்டச்சத்தோடும், வலிமையாக வளரவும், தங்குதடையின்றி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும்.
இச்சிறப்புமிக்க இப்பள்ளியைத் தேர்வு செய்த மாவட்ட கலெக்ட ருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் ஆர்.டி.ஓ தணி காச்சலம், மாவட்ட ஒருங்கி ணைப்பு அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஓமலூர் தாசில்தார் புருசோத்தமன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி ராஜா, காமலாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிக்கவுண்டர் உட்பட தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
சேலம்
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை வரவேற்று சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சிலைக்கு அமைப்புச் செயலாளர் செம்மலை முன்னிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன் எம்.எல்.ஏ, அவைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.கே.செல்வராஜூ, ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், மாவட்ட இணை செயலாளர் உமாராஜ், துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, பட்டு ராமச்சந்திரன், சரோஜா, பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், யாதவ மூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், முருகன், கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சரவணமணி, ராம்ராஜ், ஈஸ்வரன், வக்கீல் கனகராஜ், ஜமுனா ராணி, சுந்தரபாண்டியன், ராமசாமி, முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், இளைஞரணி இணை செயலாளர் ஜிம் ராமு, தலைவர் அருள்ராம், வேபிரிட்ஜ் ராஜேந்திரன், பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், துணைசெயலாளர் தங்கராஜ், பாமா கண்ணன் மற்றும் வட்டக் செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், கிருபாகரன், பிரகாஷ், புல்லட் செந்தில், ஸ்ரீதர், மேகலா பழனிசாமி, விநாயகம், மார்க்பந்து, நேதாஜி, கர்ணன், நாகராஜ், சகாயம், ரஞ்சித், ஜெகதீஷ், ரமளிசக்தி அன்பு, சந்துரு, ராஜாராம், ஜானகிராம், இளைஞர் பாசறை செயலாளர் வி.எஸ்.பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.
- அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
வரதட்சணை
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓம லூருக்கு வந்த மோகன்ராஜை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்ட தாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி 100 பவுன் நகை ரூ.20 லட்சம் பணம் வாங்கி வா என கூறியதாகவும் பவித்ரா மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்தி ருந்தார். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நேற்று முன்தினம் முதல் கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மோகன்ரா ஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
வழக்கு பதிவு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீ சார் நேரில் சென்று விசா
ரணை நடத்தினர். தொடர்ந்து பவித்ராவின் கணவர் மோகன்ராஜ், அவ ரது தந்தை முருகன், தாய் சாரதா என்கிற சத்தியா, உறவினர்கள் பூபதி, சவுமியா, செல்வி, பிரபு ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி அமைத்து, மத்திய அரசு புதிதாக தோற்றுவித்த புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடியிலுள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாழப்பாடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரவியம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், மத்திய அரசின் புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
- நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா (41) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் நங்கவள்ளி பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி செந்தில்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார் செந்தில்ராஜா உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த எடப்பாடி அருகே இருப்பாலியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
- நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் ரத்த பரிசோதனை லேப் வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி, இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
ஏரி
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார். பின்னர் போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். அப்போது கன்னங்குறிச்சி புது ஏரி பகு தியை காட்டியது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஏரிக்கரையில் சர ணின் மோட்டார் சைக்கிள், செல்போன், செருப்பு, ஐ.டி.கார்டு ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் தேடினர். பிற்பகல் 3 மணி யளவில் சரணின் உடலை தீயணைப்பு வீரர்கள் பிண மாக மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் உற வினர்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சரண் சரியாக படிக்காத தால் சரணை மன வேதனை யில் இருந்த சரண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் 77 தவறிய அழைப்புகள் கிடந்தன. ஆனால் அவரது செல்போன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்டிருந்ததால் யார், யாரிடம் இருந்து போன் வந்தது. கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விவரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. சரணின் செல் போனில் 77 தவறிய அழைப்புகள் கிடந்ததால் சரணை காணாததால் அவ ரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு போன் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
செல்போன் ஆய்வு
மேலும் இன்று அந்த செல்போனை திறந்து பார்த்து ஆய்வு செய்ய போலீ சார் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் யார், யாரி டம் பேசி னார், யார் யாரிடம் இருந்து போன் வந்தது என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்த னர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அ.தி.மு.க. பலமாக உள்ளது.
- ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு.
எடப்பாடி:
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அ.தி.மு.க. பலமாக உள்ளது.
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தேசியளவில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி இருக்கும். இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.
அ.தி.மு.க தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும்,உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு. எங்களிடம் நியாயம் இருந்தது. அதனால் தீர்ப்பு கிடைத்துள்ளது.
கொடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம்.
ஒரு ஆட்சி இருக்கும்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டுமென்றே இன்றைய ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க. சட்டத்தின் ஆட்சி நடத்தியது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தனபால் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர், இதே இன்றைய ஆட்சியாளர்களே விசாரணைக்கு அழைத்து சென்று 3 மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று கனகராஜை இனி யாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர், மீறி ஜெயலலிதாவின் ஓட்டுநர் என கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம், கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுனராக கனகராஜ் இருந்தவர் இல்லை.
ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு.
கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் மீது பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கிறது. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் எழுச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டத்தில் நடத்த முடியாது என்று கூறினார்கள். ஆனால் 15 லட்சம்பேர் கலந்துகொண்டு தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டது இல்லை. அந்த அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி காட்டியுள்ளோம்.
இனியாரும் அ.தி.மு.க. இரண்டாக, மூன்றாக சென்றுவிட்டது என்று கூறவேண்டாம். ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம்.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவைகள் மூலமாக தீர்ப்பு பெற்றுவிட்டோம். அ.தி.மு.க. எங்கள் தரப்பில் இருக்கிறது என்பது முழுமையாக உறுதிப்படுத்தி உள்ளோம்.
சந்திராயன்-3 தரை இறங்கியது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள் மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல என்று நிரூபணம் ஆகி உள்ளது. இந்திய வல்லரசு நாடாக உயர்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முன்னே நின்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். அ.தி.மு.க சார்பாக அவருக்கு பாராட்டு தெரிவித்து விட்டோம். தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை.
ஒரு சிலரை தவிர்த்து அ.தி.மு.க.விற்காக உழைத்தவர்கள் பிரிந்து சென்றிருந்தால் கட்சிக்குக்குள் வர நினைத்தால் இணைத்துக் கொள்வோம். சிலர் கட்சியின் ரீதியாக வளர்ந்து அதிகாரத்திற்கு வந்து எப்படி இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் விளைவித்துள்ளனர். இன்றைய ஆளும் கட்சியுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
அ.தி.மு.க தொண்டர்கள் நிறைந்த கட்சி தொண்டராக நின்று தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதிமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






