என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict: வீட்டின்மேற்கூரையை உடைத்ததுடன் வீட்டையும் சூரையடினார். He broke the roof of the house and ransacked the house."
- தாய் இறந்து விட்ட நிலையில் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
- நடராஜ் அவரது தாய்மாமன் ஏழுமலை (58) என்பவருடன் தங்கி கூலி செய்து வருகிறார்
சேலம்
சேலம் உத்தமசோழபுரம் பகுதிைய சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் நடராஜ் (28), இவரது தாய் இறந்து விட்ட நிலையில் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நடராஜ் அவரது தாய்மாமன் ஏழுமலை (58) என்பவருடன் தங்கி கூலி வேலைக்கு சென்று அந்த பகுதியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜிக்கு , ஏழுமலை திருமணம் செய்து வைத்தார். அப்போது ஏழுமலைக்கு சொந்தமான இடத்தில் நடராஜிக்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டு ஒரு வீடும் கட்டி கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டை ஏழு மலை காலி செய்யுமாறு கூறினார். அதற்கு நடராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சிறு வயதில் இருந்தே நான் வேலை செய்து உன்னிடம் தானே கொடுத்தேன் என்று நடராஜ் கூறினார்.
இதற்கிடையே ஏழு மலை நேற்றிரவு அந்த வீட்டின்மேற்கூரையை உடைத்ததுடன் வீட்டையும் சூரையடினார். இது குறித்து நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






