என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    சாதிக்பாட்ஷா

    சேலத்தில் ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

    • ரேசன் கடையில் இருந்து 3 டன் அரிசியை கடத்தல்
    • கடத்தலில் முக்கிய பங்கு வகித்த சாதிக்பாட்ஷாவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்

    சேலம் அம்மாப்பேட்டையில் கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா (வயது54). இவர் தலைமையிலான கும்பல் கடந்த 14-ந் தேதி செவ்வாய்ப்பேட்டை லைன்ரோடு கறி மார்க்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் இருந்து 3 டன் அரிசியை கடத்தியது. கடத்தலில் முக்கிய பங்கு வகித்த சாதிக்பாட்ஷாவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ரேசன் அரிசியை கடத்திய தாக இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உணவுபொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாரதி சேலம் மாவட்ட இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் சேலம் மத்திய சிறையில் உள்ள சாதிக்பாட்ஷா விடம்வழங்கப்பட்டது.

    Next Story
    ×